லக்னோ: உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பிரபல பின்னணி பாடகியும், நடிகையுமான மல்லிகா ராஜ்புத் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விஜயலட்சுமி என்கிற மல்லிகா ராஜ்புத் பாடகியும்,நடிகையும் ஆவார். இவருக்கு வயது 35. உத்திரபிரதேச மாநிலம் சுல்தான்பூரில் வசித்து வந்தார். நேற்று தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் இவர் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார். பதறிப் போன அவரது பெற்றோர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதன்பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இறந்த பாடகியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து மல்லிகா ராஜ்புத்தின் தாய் சுமித்ரா சிங் செய்தியாளர்களிடம் கூறுகையில், நாங்கள் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தோம். அப்போது மல்லிகா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது எங்களுக்கு தெரியவில்லை. கதவு உள்பக்கமாக மூடப்பட்டு, விளக்குகள் எரிந்து கொண்டே இருந்தது. நாங்கள் சந்தேகம் அடைந்து கதவை தட்டிக் கொண்டே இருந்தோம். நீண்ட நேரம் ஆகியும் கதவு திறக்கவில்லை. பின்னர் ஜன்னல் வழியாக பார்த்தேன். அப்போது அவள் தூக்கில் தொங்கியபடி இருந்தாள். நான் பதறிப்போய் என் கணவரை அழைத்தேன் என்று கதறி அழுதபடி கூறியுள்ளார்.
இதனை அடுத்து கோட்வாலி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணை குறித்து கோட்வாலி காவல் நிலைய பொறுப்பாளர் ஸ்ரீராம் பாண்டே கூறுகையில், இந்த வழக்கை முதற்கட்டமாக விசாரிக்கையில் இது தற்கொலையாகவே தெரிகிறது. முறையான போஸ்ட்மார்ட்டம் அறிக்கை வந்த பிறகே இறப்பிற்கான காரணம் என்ன என்று கூற முடியும் என கூறினார்.
"ரிவால்வர் ராணி" மல்லிகா ராஜ்புத்:
கடந்த 2014 ஆம் ஆண்டு மல்லிகா ராஜ்புத், கங்கணா ராவத் நடித்த ரிவால்வர் ராணி படத்தில் குணசித்திர வேடத்தில் நடித்தவர். நடிகை ஷான் எழுதிய யாரா துஜே பாடலுக்கான இசை வீடியோவிலும் தோன்றியுள்ளார். பின்னர் 2016 ஆம் ஆண்டு பாஜகவில் சேர்ந்தார். இதன்பின் அரசியல் கட்சியில் இருந்து வெளியேறினார்.
2022 ஆம் ஆண்டு உத்தரப்பிரதேச பாரதிய ஸ்வர்ண சங்கத்தின் தேசிய பொது செயலாளராக நியமிக்கப்பட்டார். இவர் பாடகி, நடிகை மட்டுமில்லாமல் ஒரு சிறந்த கதக் நடன கலைஞராகவும் விளங்கினார். இவரது இறப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது . மேலும் சோசியல் மீடியாவில் இவரது இறப்பிற்கு ரசிகர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அலர்ட்!
பசி,பட்டினியை போக்கவில்லை... தீபம் ஏற்ற வேண்டும் என கூறுகிறார்கள்: சீமான் ஆவேசம்!
வானுயர் ஜிஎஸ்டிபி வளர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது:முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
மெஸ்ஸியை பார்க்க முடியாமல் ரசிகர்கள் ஆவேசம்... ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மம்தா பானர்ஜி!
திமுக அரசின் துரோகத்திற்கு எதிராக தெருவுக்கு வந்த போராடும் அரசுஊழியர்கள்: அன்புமணி ராமதாஸ் வேதனை!
ஜிடிபி வளர்ச்சியில் தமிழ்நாடு புதிய சாதனை.. பெரிய மாநிலங்களில் நம்பர் 1 நாமதான்!
Flashback 2025.. தென்னிந்தியத் திரையுலகுக்கு பெரும் சோகம் தந்து விடைபெறும் 2025!
சினிமாத் துறையினரை தொடர்ந்து பாதிக்கும் மன அழுத்தம்.. உரிய கவுன்சிலிங் அவசியம்!
Amma's Pride ஆஸ்கர் விருதுக்குப் போட்டியிடும் சென்னையில் உருவான குறும்படம்!
{{comments.comment}}