சென்னை: கடன் தொல்லையால் மருத்துவர், வழக்கறிஞர் என ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தூக்கிட்டு தற்கொலை மூலம் தங்களது உயிரை நீத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை திருமங்கலம் பகுதியில் வசித்து வருபவர் பாலமுருகன் (52). இவர் ஒரு தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சுமதி (47) உயர் நீதிமன்ற வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதிகளுக்கு ஐஸ்வந்த் (19) மற்றும் லிங்கேஷ்குமார் (17) என இரண்டு மகன்கள் உள்ளனர் .
இந்த நிலையில் 4 பேரும் நேற்று திடீரென தூக்கிட்ட நிலையில் உயிரை மாய்த்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து பக்கத்து வீட்டார் உடனே திருமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் 4 பேர் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதைத்தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரும் ஏன் தற்கொலை செய்து கொண்டனர். அதற்கான காரணம் என்ன என்பது குறித்து முதற்கட்ட விசாரணை மேற்கொண்டு வந்தனர். அந்த விசாரணையில் மருத்துவர் பாலமுருகனுக்கு ஐந்து கோடி ரூபாய் கடன் இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து இந்த கடன் தொல்லையால் பாலமுருகனுக்கு மன உளைச்சல் ஏற்பட்டு, இந்த முடிவை எடுத்து இருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்கொலை தீர்வாகாது
எந்த பிரச்சனைக்கும் தற்கொலை ஒரு தீர்வாகாது. தற்போதுள்ள காலத்திற்கு ஏற்ப வாழ ஆசைப்பட்டு அளவுக்கு அதிகமாக கடன் வாங்கி கஷ்டப்படும் செயல் நமக்கு நாமே ஏற்படுத்திக் கொண்டது. ஒவ்வொருவரும் ஸெல்ப் அனலைஸ் எனக்கூடிய சுய தெளிவை ஏற்படுத்தி செயல்பட வேண்டியது தற்போது உள்ள காலகட்டத்தில் அவசியமாகி வருகிறது.
நமக்கு எவ்வளவு வருமானம் வருகிறது.. எவ்வளவு செலவு செய்கிறோம்.. தேவைகளுக்காக எவ்வளவு செலவு செய்கிறோம்.. குழந்தைகளை எவ்வாறு படிக்க வைக்கிறோம்.. என்பதையெல்லாம் அறிந்து கொண்டு அதற்கான பட்டியலை போட்டு செயல்படுத்தினால் மட்டுமே கடன் தொல்லையிலிருந்து விடுபட முடியும். அதேசமயம் வருமானத்திற்கு மீறி செலவு செய்வதை தவிர்க்க வேண்டும். மற்றவர்களைப் பார்த்து அவர்களைப் போலவே நம் வாழ்க்கையும் அமைய வேண்டும் என எண்ணக்கூடாது.
இவ்வழிகளை பின்பற்றினாலே அளவுக்கு அதிகமாக கடன் வாங்கி செலவு செய்ய வேண்டிய அவசியம் ஒன்று ஏற்படாது. அப்படியே கடன் வாங்கினாலும் கூட நம்மால் அதைத் திருப்பிச் செலுத்த முடியுமா என்பதையும் யோசித்து வாங்குவது நல்லது. ஒருவேளை கடன் தொல்லை உள்பட எந்த வகையான பிரச்சினை ஏற்பட்டாலும் உடனடியாக உணர்ச்சிவசப்பட்டு எந்த முடிவைுயும் எடுக்காதீர்கள். அதையெல்லாம் சரி செய்ய எத்தனையோ வழிகள் உள்ளன.
பல்வேறு பிரச்சினைகளால், மன அழுத்தத்திற்கு ஆளானாலோ.. மன உளைச்சல் ஏற்பட்டாலோ இதிலிருந்து விடுபட 104 என்ற இலவச எண்ணை தொடர்பு கொண்டு அதற்கான தீர்வுகளை பெறலாம்.
கள்ளச்சாராய ஆட்சி கள்ளக்குறிச்சியே சாட்சி.. எடப்பாடி பழனிச்சாமி தாக்கு.. ஆர்.எஸ்.பாரதி ஹாட் பதிலடி!
கோவையை தொடர்ந்து.. மதுரையில் களைகட்ட உள்ள..தவெகவின் பூத் கமிட்டி மாநாடு..!
வரப் போகுது அக்னி நட்சத்திரம்.. கத்திரி வெயிலிலிருந்து தப்பிப்பது எப்படி?.. சில டிப்ஸ்!
பஹல்காம் தாக்குதல்.. பிரதமர் மோடி தலைமையில் நாளை மீண்டும் அமைச்சரவை கூட்டம்!
அக்ஷய திருதியை.. தங்கம் மட்டும்தானா.. இதெல்லாமும் கூட வாங்கலாம் மக்களே!
கனடாவில் மாயமான இந்திய மாணவி வன்ஷிகா மரணம்.. கடற்கரையில் மர்மமான முறையில் உடல் மீட்பு
பஹல்காம் தாக்குதல்: நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட மல்லிகார்ஜுன் கார்கே கோரிக்கை
பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல்.. ஜிப்லைனில் பயணித்தவரின் பரபரப்பு வீடியோ!
கனடாவில் லிபரல் கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.. கூட்டணி ஆட்சியமைக்கும்.. பிரதமர் கார்னி
{{comments.comment}}