சென்னை: சென்னையில் 47வது புத்தகக் கண்காட்சி ஜனவரி 4ம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பபாசி எனப்படும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் சென்னையில் பிரமாண்டப் புத்தகக் கண்காட்சி ஆண்டுதோறும் ஜனவரி மாதம் நடத்தப்படும். அந்த வகையில் 47வது புத்தகக் கண்காட்சி ஜனவரி மாதம் 4ம் தேதி தொடங்கவுள்ளது.

நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் மாலை 4 மணிக்கு புத்தகக் கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். ஜனவரி 21ம் தேதி வரை புத்தகக் கண்காட்சி நடைபெறும். தினசரி பல்வேறு நிகழ்வுகள், சொற்பொழிவுகள், கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை இதில் இடம் பெறும் என்று அஏறிவிக்கப்பட்டுள்ளது. வேலை நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரையும், விடுமுறை நாட்களில் இரவு 11 மணி வரையும் தினசரி நிகழ்ச்சிகள் இடம்பெறும்.
வழக்கம் போல சிறப்பான முறையில் இந்த புத்தகக் கண்காட்சியை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான அரங்கம் அமைக்கும் பணிகளும் பூமி பூஜையுடன் ஏற்கனவே தொடங்கி விட்டன. பல்வேறு தலைப்புகளில் ஏராளமான புத்தகங்கள் இந்த முறையும் இடம் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்பில் மகேஸ் பொய்யாமொழி ரெய்டு: மற்றுமொரு அரசியல் பழிவாங்கல்.. மு.க.ஸ்டாலின்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் எப்போதுமே முதல் பூஜை யாருக்கு தெரியுமா?
ரெஸ்ட்டில் இருக்கிறேன்.. உடல்நலம் குறித்து விசாரித்த அனைவருக்கும் நன்றி.. மு.க.ஸ்டாலின்
ஈரான் போர் எதிரொலி: ஆசியாவுக்கான எண்ணெய் கப்பல் போக்குவரத்து செலவு புதிய உச்சம்!
"ஜெயா, நீ இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ".. மறக்க முடியுமா? (2)
ஆவியைப் பத்தி சொல்லுங்க.. எங்கே நைஸா ஓடப் பாக்கறீங்க.. வாங்க இங்க..!
MS Subbulakshmi: மகாராணி மீனாட்சியின் மதுரையில் அவதரித்த.. கர்நாடக இசையின் ராணி!
இது லண்டனா இல்லை சென்னையா.. விஜய்யைப் பார்க்க கூடிய பெரும் கூட்டம்.. சந்திப்பு ரத்து!
வாஸந்திக்குப் பிடித்த பாஸந்தி!
{{comments.comment}}