திருப்பதி : திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட துவார தரிசன டோக்கன் பெறுவதற்காக முண்டி அடித்துக் கொண்டு பக்தர்கள் சென்றதால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் மேலும் பலர் காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜனவரி 10ம் தேதி முதல் 19 ம் தேதி வரை வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற உள்ளது. ஜனவரி 10ம் தேதியன்று அதிகாலை 4 மணிக்கு திறக்கப்படும் சொர்க்க வாசல் எனப்படும் பரமபத வாசல் தொடர்ந்து 10 நாட்கள் வரை திறந்திருக்கும். இந்த வைகுண்ட துவாரத்தின் வழியாக சென்று ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கான ஆன்லைன் டிக்கெட்கள் அனைத்தும் ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டு விட்டன. ஆன்லைனில் டிக்கெட் பெற முடியாதவர்களுக்காக எஸ்எஸ்டி டோக்கன் (slotted sarva darshan tocken) விநியோகம் ஜனவரி 08ம் தேதியான நேற்று துவங்கும் என சொல்லப்பட்டது. இந்த டோக்கன் பெறுவதற்கு கட்டணம் ஏதும் கிடையாது. ஆதார் அட்டையை மட்டும் காண்பித்து, டோக்கன் பெற்றுக் கொள்ளலாம்.
சாமானிய பக்தர்கள் வைகுண்ட துவார தரிசனம் செய்வதற்காக அதிக அளவில் எஸ்எஸ்டி டோக்கன்கள் வழங்க திருப்பதி தேவஸ்தானத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கீழ் திருப்பதியில் 9 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 90 க்கும் அதிகமான கவுண்ட்டர்களிலும், திருமலையில் ஒரு இடத்திலும் எஸ்எஸ்டி டோக்கன்களை ஜனவரி 08ம் தேதி முதல் பெற்றுக் கொள்ளலாம். ஜனவரி 10, 11 ஆகிய தேதிகளில் வைகுண்ட துவார தரிசனம் செய்வதற்கான டோக்கன்கள் ஜனவரி 08ம் தேதி கிடைக்கும் என சொல்லப்பட்டிருந்தது.
வைகுண்ட ஏகாதசி விழாவின் 10 நாட்களும் டிக்கெட் அல்லது டோக்கன் இல்லாமல் திருமலைக்கு வரும் யாரும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சொல்லப்பட்டிருந்தது. இதனால் நேற்று திருப்பதியில் அமைக்கப்பட்டிருந்த 9 மையங்களிலும் எஸ்எஸ்டி டோக்கன்களை பெறுவதற்காக அதிக அளவிலான பக்தர்கள் கூடினர். அதில் விஷ்ணு நிவாசத்திற்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த மையத்தில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். இதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கடுமையான நெரிசலில் சிக்கி, 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
நூற்றுக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் டோக்கன் வாக்குவதற்காக முண்டியடித்துக் கொண்டு சென்றதால் இந்த சம்பவம் நடைபெற்றதாக போலீசார் தரப்பில் சொல்லப்படுகிறது. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இந்த சம்பவம் குறித்து அதிர்ச்சியும், கவலையும் தெரிவித்துள்ளார். சம்பவம் நடைபெற்ற இடத்தில் டிஜிபி, கலெக்டர், எஸ்பி, திருப்பதி தேவஸ்தான இஓ உள்ளிட்டோர் ஆய்வு நடத்தி வருகின்றனர். மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களை முதல்வர் சந்திரபாபு நாயுடு, இன்று காலை நேரில் சென்று சந்திக்க உள்ளார். காயமடைந்தவர்கள் நல்ல முறையில் சிகிச்சை அளிக்கும் படி டாக்டர்களுக்கு அறிவுறுத்தி உள்ள சந்திரபாபு நாயுடு, ஏன் இதற்காக உரிய முன்னேற்பாடுகள் செய்யவில்லை என கேள்வி எழுப்பி உள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
திருப்பதி கூட்ட நெரிசலில் சிக்கி தமிழ்நாட்டைச் சேர்ந்த மல்லிகா என்ற பெண் உள்பட 6 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலியான சம்பவத்தை அறிந்து மிகவும் துயரம் அடைந்தேன். தமிழ்நாட்டைச் சேர்ந்த நபரும் உயிரிழந்தது கவலை அளிக்கிறது.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணம் அடைய விரும்புகிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தமிழ்நாட்டில்.. இன்று 9 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு.. நாளை 5.. வானிலை மையம் தகவல்
பொது சிவில் சட்டம், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தால் பேராபத்து.. உதயநிதி ஸ்டாலின் கருத்து
நடிகர் விஜய் இந்தியா கூட்டணியில் வந்து சேரலாம்.. காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை யோசனை!
வெகுவிரைவில் மக்கள் திமுக ஆட்சியை புறக்கணிப்பார்கள்.. பிரேமலதா விஜயகாந்த் பேச்சு
இந்த வருடம் நாங்கள் ஏன் சர் ஜான் மார்ஷல் பொங்கல் என்று கொண்டாடினோம்?
Taste Atlas most hated foods 2025.. லிஸ்ட்டுல உப்புமா இல்லை.. பஞ்சாபி மிஸ்ஸி ரொட்டிக்கு 56வது இடம்!
சாம்பியன்ஸ் டிராபி 2025.. இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ.. துணை கேப்டனானார் சுப்மன் கில்!
Budget 2025.. ஜன. 31 முதல் பிப். 13 வரை பட்ஜெட் கூட்டத்தொடர்.. பிப். 1ல் பட்ஜெட் தாக்கல்!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்.. திமுக, நாம் தமிழர் கட்சி வேட்பு மனுக்கள் ஏற்பு!
{{comments.comment}}