டெல்லி: லோக்சபா தேர்தலில் இதுவரை ஐந்து கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துள்ள நிலையில், 8 மாநிலங்களில் 58 தொகுதிகளில் ஆறாம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது.
லோக்சபா தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் இதுவரை ஐந்து கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. ஆறாம் கட்ட தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து இறுதி கட்ட தேர்தல் ஜுன் 1ஆம் தேதி நடைபெற உள்ளது. மொத்தம் ஏழு கட்ட தேர்தல் நிறைவடைந்து ஜூன் நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

இந்த ஆறாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா, ராஜ்நாத் சிங், காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி, உள்ளிட்ட பலர் இறுதி கட்ட பிரச்சார பணியில் ஈடுபட்டனர்.
6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 58 தொகுதிகளில் 889 பேர் போட்டியிடுகின்றனர். உத்தரப் பிரதேசத்தில் 14 தொகுதிகளுக்கும், ஹரியானாவில் 10 தொகுதிகள், பீகாரில் 8 தொகுதிகள், டெல்லியில் 7 தொகுதிகள், மேற்கு வங்கத்தில் 8 தொகுதிகள், ஒடிசாவில் 6 தொகுதிகள், ஜார்க்கண்டில் 4 தொகுதிகள், ஜம்மு காஷ்மீரில் ஒரு தொகுதி என மொத்தம் 58 தொகுதிகளில் நாளை வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.
ஆறாம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. இந்தத் தேர்தல் எவ்வித தடையும் இன்றி அமைதியான முறையில் நடைபெறவும், மக்கள் பாதுகாப்புடன் வாக்களிக்கவும் தகுந்த ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது.
சேலத்தில் களை கட்டும் ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோயில் பெருவிழா
தமிழகத்தில் கொலை நடைபெறாத நாட்களே இல்லை... திமுக ஆட்சியில் யாருமே பாதுகாப்பை உணரவில்லை: அண்ணாமலை
"நாம்" என்பதால் நான் செதுக்கப்பட்டபோதும்.. "நான்" ஆகவே நிலைத்திருந்தேன்.. I!
பாஜகவினர் முயற்சி ஒருபோதும் வெற்றி பெறாது: செல்வபெருந்தகை பேட்டி!
வெளிநாடுகளில் இருந்தாலும் அயலக தமிழர்கள் தமிழ்நாட்டை மறக்கவில்லை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
மலரும் மனது!
வானத்து தாரகையின் கண்களிலிருந்து.. தாரை தாரையாய்.. The Crying Bride in the Sky
தமிழகத்தில் ஜனவரி 15 வரை கடும் குளிர்: டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
புதிய வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள்: ஆர்ஏசி, வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டுகள் கிடையாதாம்
{{comments.comment}}