சென்னை: 1 முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு டிசம்பர் 24ம் தேதி முதல் ஜனவரி 1ம் தேதி வரை 9 நாட்கள் அரையாண்டு விடுமுறை விடப்படுவதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான அரையாண்டு தேர்விற்கான அட்டவணை வெளியாகியிருந்தது. நடப்பு கல்வியாண்டிற்கான அரையாண்டு தேர்வு டிசம்பர் 10ம் துவங்கி 23ம் தேதி வரை நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. டிசம்பர் 24ம் தேதி முதல் 2025 ஜனவரி 1ம் தேதி வரை விடுமுறை என்றும், ஜனவரி 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு மூன்றாம் பருவம் ஆரம்பிக்கப்படும் என தகவல் வெளியாகி இருந்தது.
இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதன் காரணமாக ஒரு சில பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் அரையாண்டு தேர்விற்கும் மாணவர்கள் தற்போது தயாராகி வருகின்றனர். டிசம்பர் 21ம் தேதி வரை தேர்வு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது தமிழக அரசு அரையாண்டு தேர்வு பட்டியலை வெளியிட்டுள்ளது. தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரையாண்டு தேர்வு டிசம்பர் 10ம் தேதி தொடங்கிடிசம்பர் 23ம் தேதி முடிவடைகிறது.
இதனையடுத்து டிம்பர் 24ம் தேதியில் இருந்து அரையாண்டு விடுமுறை தொடங்குகிறது. 9 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 9 நாட்களுக்குள் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறையும் அடங்கியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
ஆளுநர்களை வைத்துக் குழப்பம் விளைவித்து என்ன சாதிக்கப் போகிறீர்கள்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
நீலகிரி, கோவைக்கு ஆரஞ்ச் அலர்ட்... சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்: வானிலை மையம்
ஜிஎஸ்டி வரி குறைப்பால் கார், ஏரி, டிவி விற்பனை அதிகரிப்பு: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்
கரூர் துயரம் எதிரொலி.. தீபாவளி கொண்டாட வேண்டாம்.. தொண்டர்களுக்கு தவெக வேண்டுகோள்
செவிலியர் சிறப்பு!
எனது பெயரில் நற்பணி மன்றம் தொடங்க வேண்டாம்.. விட்ருங்க.. அண்ணாமலை கோரிக்கை
திமுக அரசுக்கு நிதி நிர்வாகமே தெரியவில்லை..பாமக கூறி வந்த குற்றச்சாட்டு உறுதியாகியுள்ளது: அன்புமணி
10 கிராம் தங்கத்தோட விலை என்ன தெரியுமா.. தீபாவளியையொட்டி வச்சு செய்யும் நகை விலை!
நிதீஷ் குமார் நிச்சயம் முதல்வராக மாட்டார்.. பாஜக முடிவெடுத்து விட்டது.. சொல்கிறது காங்கிரஸ்
{{comments.comment}}