ஓய்வை அறிவித்தார் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் அம்பதி ராயுடு

May 29, 2023,12:58 PM IST
டெல்லி : குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் 2023 பைனலுடன் ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக அறிவித்துள்ளார் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் அம்பதி ராயுடு.

ஐபிஎல் 2023 கிரிக்கெட் போட்டியின் பைனலில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி நேற்று (மே 28) நடைபெற இருந்த நிலையில், மழை குறுக்கிட்டதால் ரிசர்வ் டே என சொல்லப்படும் இன்று (மே 29) அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது.



இந்நிலையில் ஐபிஎல் 2023 பைனலை முன்னிட்டு, சென்னை அணி வீரர் அம்பதி ராயுடு ஒரு ட்வீட் போட்டிருந்தார். அதில் தனது ஓய்வை அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். அந்த ட்வீட்டில் அவர், இரண்டு சிறப்பான அணிகள் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ், 204 போட்டிகள், 14 சீசன்கள், 11 பிளேஆஃப்கள், 8 பைனல்கள், 5 கோப்பைகள். ஆறாவது கோப்பை இன்று இரவு கிடைக்கும் என நம்புகிறேன். 

அத்தோடு இந்த பயணத்தில் இருந்து விலகுகிறேன். இன்று இரவு விளையாட உள்ள போட்டி ஐபிஎல் விளையாட்டில் எனது கடைசி போட்டி என முடிவு செய்துள்ளேன். நிஜமாகவே இந்த தொடரை மிகவும் ரசித்தேன். அனைவருக்கும் நன்றி. இப்போது உங்களின் தருணம்" என குறிப்பிட்டுள்ளார்.

2010 ம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி ஐபிஎல் தொடரில் தனது பயணத்தை துவக்கினார் ராயுடு. 2017 வரை அவர் பங்கேற்ற அணி மூன்று முறை டைட்டில் வென்றது. 2018 ம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்த ராயுடு, தற்போது வரை விளையாடி வருகிறார். இவர் வந்த பிறகு சென்னை அணி 2 கோப்பையை வென்றுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

Poem on Life: வாழ்க்கை!

news

இணையத்தில் செம டிரெண்டிங்.. பரபரக்கும் ‘You+Me - Against the World’ திரைப்பட கிளைமேக்ஸ்!

news

கல்யாண விருந்து.. பந்தி முதல் டிஜே நடனம் வரை.. பாப்கார்ன் கல்யாணமும்... பாரதிராஜா ஹீரோயினும்!

news

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்.. முதல்வர் விஜய் போட்ட ஸ்டிரிக்ட் உத்தரவு

news

இடைத்தேர்தல் களம்: தாராபுரம், மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் 4 நாட்கள் பிரச்சாரம்

news

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணம் : கடுமையாக விமர்சித்த டி.ஆர்.பி. ராஜா

news

அதிமுக நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பெயர் மிஸ்ஸிங்

news

புரட்டாசி சனிக்கிழமையில் பெருமாளை வழிபட்டால்.. குடும்பத்தில் வளம் பெருகும்!

news

ரூ.100 கோடி மோசடி வழக்கு: மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆஜர்

அதிகம் பார்க்கும் செய்திகள்