ஊழலுக்கு எதிராக ஜூனில் பாதயாத்திரை... ராகுலை தொடர்ந்து அண்ணாமலையும் புறப்படுறார்

Apr 14, 2023,03:32 PM IST
சென்னை : ஊழலுக்கு எதிராக ஜூனில் பாதயாத்திரை துவங்க உள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். என் மண் என் மக்கள் என்ற பெயரில் பாதயாத்திரை நடத்தப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

திமுக.,வின் ஊழல் மற்றும் சொத்து விபரங்களை ஏப்ரல் 14 ல் வெளியிட போவதாக அறிவித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, சொன்னபடியே பட்டியலை வெளியிட்டார். அதோடு தான் காவல் துறையில் இருக்கும் போது வாங்கிய லஞ்சப் பணத்தில் ரஃபேல் வாட்ச் வாங்கியதாக திமுக.,வினர் கிளப்பி விட்ட குற்றச்சாட்டிற்கும் அவர் பதிலளித்தார். DMKFiles என்ற பெயரில் திமுக.,வின் ஊழல் பட்டியலை வெளியிட்ட அண்ணாமலை, இது பார்ட் 1 தான். இது போல் தொடர்ந்து இந்த ஆண்டு முழுவதும் வெளியிட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.



தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, ஊழல் பட்டியலை பார்ட் 4 வரை வெளியிடுவேன். வேறு வேறு கட்சிகளும் அதில் இடம்பெறும். ஊழலை எதிர்க்க ஆரம்பித்தால் ஒரு கட்சியை மட்டும் எதிர்க்க முடியாது. மொத்தமாக எதிர்க்க வேண்டும். திமுக அரசின் அனைத்து ஊழல்களையும் வெளியிடுவேன். ஸ்டாலின் குடும்பத்தினர், திமுக அமைச்சர்களின் கணக்கில் வராத அனைத்து சொத்துக்களையும் வெளியிடுவேன். இப்போது நேரடி சொத்து விபரத்தை மட்டுமே வெளியிட்டுள்ளேன். இனி பங்குகள், பங்குதாரர்களின் சொத்து விபரங்கள் உள்ளிட்ட அனைத்தும் வெளியிடப்படும்.

உலக அளவில் திமுக கட்சிக்கு எப்படி இவ்வளவு பணம் வந்தது என்பது தான் என்னுடைய கேள்வி.  திமுக.,வின் ஊழல்களை அம்பலப்படுத்த ஜூன் முதல் வாரத்தில் பாத யாத்திரை துவங்க உள்ளேன். எங்கள் கட்சியின் தலைவர்கள் பலரும் இதில் பங்கேற்க உள்ளனர். தமிழக கட்சிகளின் ஊழல்களை மக்களிடம் கொண்டு சேர்க்காமல் நான் நிறுத்த போவதில்லை. ஒவ்வொரு பாஜக தொண்டரும் இந்த யாத்திரையில் பங்கேற்பார்கள் என்றார்.

சமீத்தில் தான் பாஜக.,வின் ஊழல்களை மக்களுக்கு எடுத்துக் கூற போவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாத யாத்திரை மேற்கொண்டார். இது காங்கிரசிற்கு நாடு முழுவதும் எழுச்சியையும், பலத்தையும் ஏற்படுத்தி உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் திமுக அரசுக்கு எதிராக தமிழகத்தில் பாஜக அண்ணாமலையும் பாத யாத்திரை செல்ல உள்ளதாக அறிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!

news

மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்

news

வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!

news

கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!

news

ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!

அதிகம் பார்க்கும் செய்திகள்