Arvind Swamy in Custody: சிரிச்சுக்கிட்டே வில்லத்தனம்.. இதுக்கெல்லாம் தனி கெத்து தேவை!

May 15, 2023,12:58 PM IST
சாக்லேட் பாயாக ஒரு காலத்தில் இளம் பெண்களின் உள்ளங்களை துவம்சம் செய்தவர் அரவிந்த் சாமி.. ஆனால் இன்று தனது ஸ்வீட்டான வில்லத்தனத்தால் வெள்ளித்திரையை அதிர வைத்துக் கொண்டிருக்கிறார்.

ஹீரோவாக இருந்தபோது எப்படியெல்லாம் அசத்தினாரோ அதேபோல இப்போது வில்லத்தனம் செய்வதிலும் கூட தன்னைப் பற்றியே அதிகம் பேச வைக்கிறார் அரவிந்த் சாமி. தனி ஒருவன் படம் அவருக்கு மிகப் பெரிய பெயரைப் பெற்றுக் கொடுத்தது.



நுனி நாக்கில் ஆங்கிலம், முகம் முழுக்க வில்லத்தனம், மனசெல்லாம் விஷமம் என்று அந்தப் படம் முழுக்க வில்லத்தனத்தை அட்டகாசமாக வெளிப்படுத்தியிருப்பார் அரவிந்த் சாமி. அதற்குப் பிறகு பல படங்களில் கிட்டத்தட்ட அதே பாணியிலான வில்லன் ரோல்களே வந்ததால் பலவற்றை அவர் ஏற்கவே இல்லை. 

இந்த நிலையில்தான் வெங்கட்பிரபு இயக்கிய கஸ்டடி படத்தில் அவருக்கு அட்டகாசமான ரோல் கிடைத்து புகுந்து விளையாடி விட்டார் மனிதர். படம் முழுக்க ஓடிக் கொண்டேதான் இருக்கிறார். அடிக்கிறார், அடி வாங்குகிறார்.. கடைசியில் சரத்குமார் கையால் குண்டடி பட்டு செத்துப் போகிறார். ஆனால் இந்த இடைப்பட்ட நேரத்தில் அவரது நடிப்பு இருக்கே.. வாழ்ந்திருக்கிறார்.



ராஜு இல்லடா.. ராஜு என்று அவர் சொல்லும் விதமே வித்தியாசமாக இருக்கிறது. அதை விட அவரது வசனம் பேசும் ஸ்டைலும், டேய் நான் சொல்றதை கேளுங்கடா.. என்று அலுத்துக் கொள்வதும், வத்திப்பெட்டி இருக்கா என்று கேட்டு கேட்டு வெளுப்பதும் சிரிக்க வைக்கிறது.. படம் முழுக்க ஒரு விதமான இறுக்கம் நிலவி வந்தாலும் அரவிந்த் சாமி வரும் சீன்களில்தான் சற்று ரிலாக்ஸாகி ரசிகர்கள் என்ஜாய் செய்து சிரிக்கிறார்கள்.

படத்தில் நிறைய லாஜிக் ஓட்டைகள்.. பலருடைய நடிப்பு ஒட்டவே இல்லை. குறிப்பாக ஹீரோ நாகசைதன்யா பேசும் தமிழ் மனதுக்கு ஒட்டி வரவில்லை. ஹீரோயினுக்கு வழக்கம் போல பெரிதாக வேலையில்லை.. வருகிறார்.. ஆடிப் பாடுகிறார்.. அப்படியே ஹீரோவுடன் லக்கேஜ் போல ஒட்டிக் கொண்டே பயணிக்கிறார்.. தட்ஸ் ஆல்.

பிரியா மணி முதல்வராக வருகிறார்.. பெரிதாக ஸ்கோப் இல்லை.. அவரை இன்னும் நன்றாக பயன்படுத்தியிருக்கலாம்.. படத்தில் இரண்டு பேர்தான் பேசப்படுகிறார்கள்.. ஒருவர் அரவிந்த் சாமி, இன்னொருவர் சரத்குமார். இருவரும் அடித்து நொறுக்கியிருக்கிறார்கள். ஆனால் மொத்தமாக எல்லோரையும் தூக்கி சாப்பிட்டு ஏப்பம் விட்டிருப்பவர் அரவிந்த் சாமி மட்டுமே. நல்ல படம் அவருக்கு நீண்ட இடைவெளிக்குப் பிறகு.. இன்னும் கூட அவரது ரோலை சற்று விஸ்தரித்திருந்தால், படம் பாக்ஸ் ஆபீஸில் நின்று விளையாடியிருக்கும்.

ஆமா.. வெங்கட் பிரபு படமாச்சே.. நம்ம பிரேம்ஜி இருக்கணுமே.. அப்படின்னுதானே கேட்கறீங்க.. என்ன கொடுமை சார் இது.. அதை எப்படி எங்க வாயாலே சொல்வோம்.. போய் நீங்களே படத்தைப் பார்த்துத் தெரிஞ்சுக்கங்க!

சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்