மும்பை: இந்தியா - மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் சட்டேஸ்வர் புஜாரா நீக்கப்பட்டு இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சேர்க்கப்பட்டுள்ளார்.
டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளுக்கான கேப்டனாக ரோஹித் சர்மா இருப்பார். அஜிங்கியா ரஹானே துணைக் கேப்டனாக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் மேற்கு இந்தியத் தீவுகளில் சுற்றுப் பயணம் செய்யவுள்ளது. 2 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளிலும், 5 டி20 போட்டிகளிலும் இரு அணிகளும் மோதவுள்ளன. முதல் டெஸ்ட் போட்டி ஜூலை 12ம் தேதி டொமினிக்காவில் உள்ள வின்சர் பார்க் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்த நிலையில் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளுக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. ரோஹித் சர்மா தலைமையிலான டெஸ்ட் அணியில் சட்டேஸ்வர் பூஜாரா நீக்கப்பட்டுள்ளார். யஷஸ்வி ஜெய்ஸ்வால் சேர்க்கப்பட்டுள்ளார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பேக்கப் தொடக்கஆட்டக்காரராக சேர்க்கப்பட்ட ருத்துராஜ் கெய்க்வாட் அணியில் இடம் பிடித்துள்ளார்.
யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக ஆடி அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தார் என்பது நினைவிருக்கலாம். அதேபோல முகேஷ் குமாரும் இந்திய அணியில் முதல் முறையாக இடம் பிடித்துள்ளார். டெஸ்ட் தொடருக்கு இந்திய அணியின் துணைக் கேப்டனாக அஜிங்கியா ரஹானேவும், ஒரு நாள் போட்டிகளில் ஹர்டிக் பான்டியாவும் துணைக் கேப்டனாக செயல்படுவார்கள்.
ஒரு நாள் அணியைப் பொறுத்தவரை சஞ்சு சாம்சன் மீண்டும் இடம் பிடித்துள்ளார். உமேஷ் யாதவ் நீக்கப்பட்டுள்ளார். டி20 போட்டிகளுக்கான அணி பின்னர் அறிவிக்கப்படும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.
இந்திய டெஸ்ட் அணி:
ரோஹித் சர்மா, சுப்மன் கில், ருத்துராஜ் கெய்க்வாட், விராட் கோலி, யஷஸ்வி ஜெய்ஸ்வால், அஜிங்கியா ரஹானே, கே.எஸ். பரத், இஷான் கிஷான், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், அக்ஸார் படேல், முகம்மது சிராஜ், முகேஷ் குமார், ஜெயதேவ் உனத்கட், நவ்தீப் சைனி.
ஒரு நாள் போட்டிகளுக்கான அணி:
ரோஹித் சர்மா, சுப்மன் கில், ருத்துராஜ் கெய்க்வாட், விராட் கோலி, சூர்ய குமார்யாதவ், சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், ஹர்டிக் பான்ட்யா, ஷர்துள் தாக்கூர், ரவீந்திர ஜடேஜா, அக்ஸார் படேல், யுஸ்வேந்திர சஹல், குல்தீப் யாதவ், ஜெயதேவ் உனட்கத், முகம்மது சிராஜ், உம்ரான் மாலிக், முகேஷ் குமார்.
பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்.. முதல்வர் விஜய் போட்ட ஸ்டிரிக்ட் உத்தரவு
இடைத்தேர்தல் களம்: தாராபுரம், மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் 4 நாட்கள் பிரச்சாரம்
முதல்வர் விஜய்யின் லண்டன் பயணம் : கடுமையாக விமர்சித்த டி.ஆர்.பி. ராஜா
அதிமுக நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பெயர் மிஸ்ஸிங்
புரட்டாசி சனிக்கிழமையில் பெருமாளை வழிபட்டால்.. குடும்பத்தில் வளம் பெருகும்!
ரூ.100 கோடி மோசடி வழக்கு: மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆஜர்
புரட்டாசி மாதம் வந்தாச்சு.. 6வது தமிழ் மாதம்.. பெருமாள் வழிபாட்டுக்கு உகந்த புனித மாதம்!
த.வெ.க அரசின் முதல் சட்டப்பேரவைக் தொடர்: 12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்!
நமநமக்கும் வாய்கள்.. கலகலக்கும் வயிறுகள்.. புரட்டாசி மாத அலப்பறைகள்!
{{comments.comment}}