ராஞ்சி: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ். தோனி தனது மனைவி சாக்ஷி சிங்குடன் விமான பயணம் மேற்கொண்டது ரசிகர்களிடையே வைரலாகியுள்ளது. காரணம், மிகவும் சிம்பிளாக எக்கானமி கிளாஸ் இருக்கையில் அமர்ந்து அவர் பயணம் செய்ததே.
கூல் கேப்டன் என்று பெயர் வாங்கியவர் தோனி. அதை விட முக்கியமாக ரசிகர்கள் மனதில் மிகப் பெரிய சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பவர். சமீப காலத்தில் சச்சின் டெண்டுல்கருக்குப் பிறகு மிகப் பெரிய அளவில் ரசிகர்களின் வெறித்தனமான அன்பைப் பெற்றவர் தோனி மட்டுமே.
அவர் போகுமிடமெல்லாம் ரசிகர் படையும் சேர்ந்து போனதை சமீபத்தில் ஐபிஎல் போட்டிகளின்போது பார்த்து உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆச்சரியத்தில் மூழ்கினர். இப்படி ஒரு கூட்டத்தை கட்டிப் போட முடியுமா என்று அனைவரும் வியப்படைந்தனர். அந்த அளவுக்கு ரசிகர் படையை வைத்திருப்பவர் தோனி.
இத்தனை புகழ், பெயர் இருந்தும் கூட எந்த பந்தாவும், அலப்பறையும் பண்ணாமல் சிம்பிளாக இருப்பவர் தோனி. அதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார் தோனி. அவர் தனது மனைவி சாக்ஷியுடன் விமான பயணம் மேற்கொண்டார். ஜன்னலோர சீட்டில் தோனி அமர்ந்திருக்க நடு சீட்டை விட்டு விட்டு இந்தப் பக்கம் சாக்ஷி அமர்ந்திருந்தார்.அவர்கள் பயணித்தது சாதாரண மக்கள் பயணிக்கும் எக்கானமி வகுப்பில்தான். நடு வரிசையில் தோனி தம்பதி சர்வ சாதாரணமாக அமர்ந்து பயணித்தது.
தோனிக்கு ஏர் ஹோஸ்டஸ் சாக்லேட்டுகள் அடங்கிய தட்டைக் கொண்டு வந்து கொடுத்து அவரைக் கெளரவித்தார். அதை எளிமையாக எதிர்கொண்ட தோனி, நன்றியும் சொல்லிப் புன்னகைக்கிறார். இந்த சிம்பிளிசிட்டியான விமான பயணம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து விட்டது. வழக்கம் போல சமூக வலைதளங்களில் தோனி ரசிகர்கள் இதைக் கொண்டாடி வருகின்றனர்.
சமீபத்தில்தான் தோனிக்கு காலில் அறுவைச் சிகிச்சை நடைபெற்றது. அதிலிருந்து தற்போது அவர் குணமடைந்து வருகிறார். தற்போது பெரிதாக வலி இல்லை என்று தோனி கூறியதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயலதிகாரி காசி விஸ்வநாதன் கூறியுள்ளார். கால் வலியுடன்தான் சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் தோனி விளையாடி, கப்பை வென்று கொடுத்தார் என்பது நினைவிருக்கலாம்.
இந்த வாழ்க்கை ஒரு கனவா?
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை.. முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 30, 2025... இன்று மகிழ்ச்சி தேடி வரும் ராசிகள்
பணியாளர் நியமனத்தில் முறைகேடா?.. களங்கம் கற்பிக்க மத்திய அரசு முயற்சி.. அமைச்சர் கே. என். நேரு
2,538 பணியிடங்களுக்கு முறைகேடாக பணி நியமனம் செய்து ரூ.888 கோடி திமுக ஊழல்: அண்ணாமலை குற்றச்சாட்டு
Rain Rain come again.. தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்
மக்களைக் காக்க யாரும் எங்களுக்கு சொல்லித் தர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
நவ. 5ல் சிறப்பு பொதுக்குழு: ஆழ் நீள் அடர் அமைதிக்குப் பிறகு.. பேசப் போகிறேன்.. விஜய் அறிக்கை
காலையில் மட்டுமில்லங்க..பிற்பகலிலும் உயர்ந்தது தங்கம் விலை.. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.2,000 உயர்வு
{{comments.comment}}