டிஜிட்டல் பண பரிவர்த்தனை.. டாப் 5 நாடுகளில் இடம்பிடித்த இந்தியா

Jun 10, 2023,02:58 PM IST

டில்லி : டிஜிட்டல் பணபரிவர்த்தனையை அதிகம் பயன்படுத்தும் உலகின் டாப் 5 நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம்பிடித்துள்ளதாக இந்திய அரசின் புள்ளி விபரம் தெரிவிக்கிறது. 2022 ம் ஆண்டில் மட்டும் 89.5 மில்லியன் டிஜிட்டல் பணபரித்தனை நடந்துள்ளதாக இந்திய அரசு அறிவித்துள்ளது.

புள்ளிவிபரங்களின் படி, 2022 ம் ஆண்டில் உலகில் நடந்த டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் 46 சதவீதம் இந்தியாவில் நடந்துள்ளது. மற்ற நான்கு நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 9 ஆண்டுகளில் இந்தியாவில் பணமில்லா பொருளாதாரம் வெகுவாக முன்னேறி உள்ளது. 



உலகில் டிஜிட்டல் பணபரிவர்த்தனையை அதிகம் பயன்படுத்தும் நாடுகளில் பிரேசில் 2வது இடத்திலும் (29.2 மில்லியன்), சீனா 3வது இடத்திலும் (16.5 மில்லியன்), தென் கொரியா 4வது இடத்திலும் (8 மில்லியன்) உள்ளன. கிராமப் புறங்களிலும் கூட டிஜிட்டல் பணபரிவர்த்தனை இந்தியாவில் அதிகம் பயன்படுத்த துவங்கியதால் இந்தியா இந்த பட்டியலில் முதலிடத்தில் இருந்து வருகிறது.

மற்ற நாடுகளை விட இந்தியாவில் மொபைல் டேட்டா கட்டணமும் குறைவாக இருப்பதும் இதற்கு முக்கிய காரணம் ஆகும். டிஜிட்டல் பணபரிவர்த்தனையில் இந்தியா புதிய மைல்கல்லை எட்டி உள்ளது. புதிய முறைக்கு இந்திய மக்கள் மாறி உள்ளதாகவும், இதனால் இந்திய பொருளாதாரம் உயர்ந்து வருவதாகவும் ஆர்பிஐ நிபுணர்களும் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

Cauvery River water Issue: காவிரி நீர் பிரச்சனை எப்போது துவங்கியது? .. இதற்கு என்ன தான் தீர்வு?

news

முதல்வர் விஜய் கர்நாடகா வர வேண்டாம் : கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார்

news

டாஸ்மாக் ஊழல் வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமீன்...கைது செய்யவும் தடை

news

மின்சார கட்டணம் உயர்வு உண்மையா? - அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

news

வருமான வரி தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்...தவறவிட்டால் அபராதம்

news

காவல் நிலையத்தில் ஆஜராவதில் இருந்து 6 நாட்கள் விலக்கு கோரி செந்தில் பாலாஜி மனு

news

2027 ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட்: 3 நாடுகளின் 12 மைதானங்களில் போட்டிகள் நடைபெறும்

news

ஜெர்மனியில் கடும் வெப்ப அலை: பலியானோர் எண்ணிக்கை 10,000 ஆக உயர்வு!

news

மேகதாது அணை விவகாரம்: தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் தீவிர ஆலோசனை!

அதிகம் பார்க்கும் செய்திகள்