சிறுபான்மையினர் நலனைப் பாதுகாக்காவிட்டால் இந்தியா பிரியும்.. ஒபாமா

Jun 23, 2023,10:03 AM IST

வாஷிங்டன்: நான் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால், சிறுபான்மையினர் நலனைப் பாதுகாக்கத் தவறினால், ஒரு கட்டத்தில் இந்தியா பிரிந்து போக வாய்ப்பு உள்ளது என்று தெரிவிப்பேன் என்று முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறியுள்ளார்.


சிஎன்என் தொலைக்காட்சிக்கு பராக் ஒபாமா ஒரு பேட்டி அளித்துள்ளார். அந்தப் பேட்டியின்போதுதான் இவ்வாறு அவர் கூறினார். அவரது  இந்தப் பேட்டி அமெரிக்கா முழுவதும் வைரலாகியுள்ளது. இந்தியாவிலும் பலர் இந்தப் பேட்டியை வைரலாக்கி வருகின்றனர்.




சிஎன்என் தொலைக்காட்சியின் கிறிஸ்டியன் அமன்போர்-க்கு பராக் ஒபாமா அளித்துள்ள பேட்டியில் இந்தியா தொடர்பாக கூறியுள்ளதாவது:


அமெரிக்க  அதிபர் ஒருவர் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திப்பது என்பது சிறப்பானது. அப்படிப்பட்ட சந்திப்பினோது, இந்தியாவில் முஸ்லீம் சிறுபான்மையினரின் நலன் குறித்து விவாதிக்கப்பட வேண்டும்.  அது முக்கியமானது. 


ஒரு வேளை எனக்கு பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால், அவருடன் பேசும் சூழல் ஏற்பட்டால் நிச்சயம் நான் இதுகுறித்துப் பேசுவேன். பிரதமர் மோடியை எனக்கு நன்றாகத் தெரியும். அவருடன் பேசும்போது, இந்தியாவில் மதச் சிறுபான்மையினரின் நலன் பாதுகாக்கப்பட வேண்டும். அப்படிச் செய்யத் தவறினால், ஒரு கட்டத்தில், இந்தியா பிரிந்து போகும் அபாயம் இருப்பதை அவரிடம் தெரிவிப்பேன்.


உள்நாட்டுக்குள் மத ரீதியாக மோதல்கள் ஏற்படுவது நல்லதல்ல. சிறுபான்மை முஸ்லீம்கள் மட்டுமல்லாமல், பெரும்பான்மை இந்து இந்தியர்களும் கூட இதனால் பாதிக்கப்படுவார்கள்.  எனவே இதை நேர்மையாக எதிர்கொள்வது அவசியம் என்று நான் கருதுகிறேன். உலகம் மிகவும் சிக்கலானது. எனவே எதையும் நாம் எளிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. நான் அமெரிக்க அதிபராக இருந்தபோது, பிரதமர் மோடியுடன் இணைந்து காலநிலை மாற்றம் தொடர்பாக நெருங்கிப் பணியாற்றினேன். பாரீஸ் ஒப்பந்தங்கள் ஏற்பட இரு தலைவர்களும் இணைந்து பணியாற்றினோம்.


சீனா குறித்து அமெரிக்கா அக்கறை காட்ட வேண்டும். உய்குர் முஸ்லீம்களை சீன அரசு முகாம்களுக்கு அனுப்பி வருகிறது. இது அபாயகரமானது. இந்த விவகாரத்தில் அமெரிக்கா தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்றார் பராக் ஒபாமா.


பாஜக கண்டனம்


இதற்கிடையே,  பராக் ஒபாமாவின் கருத்துகளுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.  இதுகுறித்து பாஜக துணைத் தலைவர் பைஜயந்த் ஜெய் பான்டா கூறுகையில், விஷமத்தனமாக பேசியுள்ளார் பராக் ஒபாமா.  இந்தியாவுக்கு எதிரான சக்திகளுடன் இணைந்து குரல் கொடுத்துள்ளார் என்று கூறியுள்ளார் பான்டா.

சமீபத்திய செய்திகள்

news

Cyclone Montha effect: திருவள்ளூருக்கு ஆரஞ்சு... சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்!

news

2026 தேர்தலிலும் திமுக.,வுக்கு தான் வெற்றி...முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை

news

வாக்குரிமைப் பறிப்பைத் தடுப்போம்... வாக்குத் திருட்டை முறியடிப்போம்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

news

விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் அரசு...திமுக மீது விஜய் தாக்கு

news

ஷ்ரேயாஸ் ஐயருக்கு என்ன தான் ஆச்சு?...குழப்பத்தில் கிரிக்கெட் ரசிகர்கள்

news

இயற்கை வளங்களை அழித்து மணல் கொள்ளையை அரங்கேற்ற துடிக்கும் திமுக அரசு: அன்புமணி காட்டம்!

news

மோன்தா புயல் தீவிரம்... ஆந்திராவில் 19 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

news

ஒரே நாளில் 30,000 ஊழியர்களை வேலையை விட்டு தூக்கிய அமேசான்

news

தேர்தலுக்கு தயாராகும் தேர்தல் கமிஷன்...இன்று முதல் பயிற்சி ஆரம்பம்

அதிகம் பார்க்கும் செய்திகள்