நவி மும்பையில் மலரும் "தாமரை".. மும்பைக்கு 2வது சர்வதேச விமான நிலையம்!

Jun 10, 2023,12:33 PM IST
மும்பை: மும்பை நகரம் புதிய வரலாறு படைக்கவுள்ளது. நாட்டிலேயே 2 சர்வதேச விமான நிலையங்களைக் கொண்ட முதல் நகராக மும்பை உருவெடுக்கிறது. மும்பைக்கு அருகே உள்ள நவி மும்பையில் புதிய அதி நவீன சர்வதேச விமான நிலையம் உருவாகிறது. இது தாமரை மலரை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

மும்பை இந்தியாவின் வர்த்தக தலைநகராக விளங்குகிறது. மிகப் பெரிய நகரமாக மாறி விஸ்வரூபம் எடுத்து நிற்கும் மும்பையின் வளர்ச்சி அபரிமிதமானது. மும்பையில் ஏற்கனவே சர்வதேச விமான நிலையம் உள்ள நிலையில் தற்போது புதிதாக மும்பையின் புறநகர்ப் பகுதியான நவி மும்பையில் இன்னொரு பிரமாண்ட சர்வதேச விமான நிலையம் அமையவுள்ளது.



நவி மும்பையில் உள்ள உல்வே என்ற இடத்தில் இந்த சர்வதேச விமான நிலையம் அமைக்கப்படுகிறது. எதிர்காலத்தில் மும்பை சர்வதேச விமான நிலையத்தில் ஏற்பட வாய்ப்புள்ள நெருக்கடியைக் கருத்தில் கொண்டே இப்போதே நவி மும்பையில் இன்னொரு விமான நிலையம் அமைக்கப்படுகிறது.

அதானி ஏர்போர்ட்ஸ் குழுமம்தான் இந்த விமான நிலையத்தைக் கட்டி நிர்வகிக்கப் போகிறது. நான்கு கட்டமாக இது கட்டப்படும். உலகிலேயே மிகச் சிறந்த, சுற்றுச்சூழலுக்கு உகந்த விமான நிலையமாக இது கட்டப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விமான நிலையத்துக்குள் இயக்கப்படும் அனைத்து வாகனங்களும் எலக்ட்ரிக் மற்றும் பேட்டரி வாகனங்களாக இருக்குமாம். மேலும் கிரீன் மின்சாரம் பெருமளவில் பயன்படுத்தப்படவுள்ளது. சூரிய மின் சக்தியை பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. 

இந்த விமான நிலையத்தின் விசேஷம் என்ன தெரியுமா.. இந்தியாவின் தேசிய மலரான தாமரை மலரை அடிப்படையாக வைத்து இதன் வடிவமைப்பு திட்டமிடப்பட்டுள்ளதாம். பாஜகவின் தேசிய சின்னமும் கூட தாமரைதான் என்பதும் இங்கு நினைவுகூறத்தக்கது.

புதிய விமான நிலையத்தின் பணிகள் ஏற்கனவே தொடங்கி நடந்து வருகின்றன. இந்தப் பணிகளை மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் நேரில் சென்று பார்த்து ஆய்வு செய்தனர். முதல் இரு கட்டப் பணிகள் 2024 டிசம்பர் மாதத்துக்குள் முடிவு பெறும்.  மொத்தம் 1160 ஹெக்டேர் பரப்பளவில் புதிய விமான நிலையம் அமையவுள்ளது.

தற்போது உள்ள மும்பை விமான நிலையத்துக்கும், நவி மும்பை விமான நிலையத்துக்கும் இடையிலான தூரம் 35 கிலோமீட்டர் தான் என்பது முக்கியமானது. இதனால் இரு விமான நிலையங்களுக்கு இடையே பயணம் செய்வோருக்கு அதிக பிரச்சினை இருக்காது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல நவி மும்பை விமான நிலையத்துக்கும், மும்பை நகரின் பல்வேறு முக்கியப் பகுதிகளுக்கும் சிறப்பான சாலைப் போக்குவரத்து வசதியும் ஏற்கனவே உள்ளது என்பதும் முக்கியமானது.

சமீபத்திய செய்திகள்

news

கல்யாண விருந்து.. பந்தி முதல் டிஜே நடனம் வரை.. பாப்கார்ன் கல்யாணமும்... பாரதிராஜா ஹீரோயினும்!

news

செங்கல்பட்டு, திருப்பூர் தவிர... செப் 28 ல் தாய்மாமன் தங்க மோதிர திட்டம் துவக்கம்

news

"எவன் என்ன சொன்னா என்ன?" - 'பத்தா' ஆடியோ விழாவில் அட்லீ சொன்ன குட்டி ஸ்டோரி

news

கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கை

news

பிரம்ம தேவர் சரஸ்வதி தேவியை ஏன் திருமணம் செய்து கொண்டார்?

news

"ஆம்பளைங்கனா ஒஸ்தி, பொம்பளைங்கன்னா மட்டமா..?"

news

short cute Story: ஆடி வரும் ஆடி.. படியிலிருந்து தள்ளுவார்களா?!

news

சிந்தனைச் சிதறல்.. வெற்றியும் தோல்வியும், சோகமும் மகிழ்ச்சியும் ,கோபமும் பொறுமையும்!

news

Short Story : நாளை எண்ணிக்கொண்டிருக்கிறார்!

அதிகம் பார்க்கும் செய்திகள்