சென்னையில் தியேட்டர் பிசினசை துவங்கும் லேடி சூப்பர்ஸ்டார்

May 23, 2023,03:55 PM IST
சென்னை : தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா, பல தொழில்களில் முதலீடு செய்து வருகிறார். பல படங்களை தயாரித்தும், நடித்தும் வருகிறார். பிசினஸ், நடிப்பு என பிசியாக இருந்து வரும் நயன்தாரா, சென்னையில் புதிய பிசினஸ் ஒன்றை துவங்க போகிறாராம்.

சென்னையில் முதல் முறையாக சொத்து ஒன்றை வாங்கி உள்ளாராம் நயன்தாரா. தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து தங்களின் ரெளடி பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் வடசென்னையில் உள்ள மிக பழமையான அகஸ்தியா தியேட்டரை விலைக்கு வாங்கி, தியேட்டர் பிசினஸ் துவங்க போகிறாராம். 



தேவி தியேட்டர் குழுமத்தால் அகஸ்தியா தியேட்டர் நடத்தப்பட்டு வருகிறது. 1967 ம் ஆண்டு வட சென்னையில் கட்டப்பட்ட இந்த தியேட்டரில் எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல், அஜித், விஜய் என பல டாப் ஹீரோக்களில் ஏராளமான பிளாக்பஸ்டர் படங்கள் திரையிடப்பட்டு, வசூல் மழையில் நனைந்த தியேட்டர் ஆகும். சிங்கிள் ஸ்கிரீன் தியேட்டரான இந்த தியேட்டர் கொரோனா லாக்டவுனிற்கு பிறகு பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. 53 ஆண்டுகளாக இயங்கி வந்த இந்த தியேட்டர் 2020 ம் ஆண்டு கொரோனா காலத்தின் போது தான் முதல் முறையாக மூடப்பட்டது.

அதற்கு பிறகு தியேட்டர் தொழில் சரியாக போகாததால் இந்த தியேட்டரை மூடி விடலாமா என இதன் உரிமையாளர்கள் யோசித்து வந்தனர். இந்நிலையில் மூடும் நிலையில் இருக்கும் இந்த தியேட்டரை வாங்கி, புதுப்பிக்க நயன்தாரா திட்டமிட்டுள்ளாராம். இந்த தியேட்டரை டபுள் ஸ்க்ரீன் வசதி உடையதாக மாற்றி, ஆயிரம் பேர் வரை அமர்ந்து பார்க்கும் அளவிற்கு வசதி செய்வது தான் நயன்தாராவின் திட்டமாம்.

தங்கள் வாழ்நாளிலேயே மிகப் பெரிய விஷயமாக நயன்தாரா - விக்னேஷ் சிவனும் இதனை கருதுகிறார்களாம். இந்த தியேட்டர் தான் நயன்தாரா சென்னையில் வாங்கும் முதல் சொத்தாம். இதன் மூலம் தியேட்டர் பிசினலும் அவர் அடியெடுத்து வைக்க உள்ளார். 

தற்போது நயன்தாரா,  அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் ஜவான் படத்தில் நடித்து வருகிறார். விஜய் சேதுபதி, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படம் செப்டம்பர் 7 ம் தேதி ரிலீசாக உள்ளது. அதோடு லேடி சூப்பர்ஸ்டார் 75, தி டெஸ்ட் ஆகிய படங்களிலும் நயன்தாரா நடித்து வருகிறார். தி டெஸ்ட் படம், நடிகர் மாதவனுடன் நயன்தாரா நடிக்கும் முதல் படமாகும்.

சமீபத்திய செய்திகள்

news

கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!

news

Sunday Special Veg dish.. மீன் குழம்புக்கு டஃப் தரும் கத்திரிக்காய் பலாக்கொட்டை புளிக்குழம்பு!

news

வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!

news

தனுஷின் இட்லி கடை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்