- மயிலாடுதுறை த.சுகந்தி,M.Sc,B.Ed
ரோட்ராக்ட் தினம் ஒன்று இருக்கிறதா ? அப்படின்னா என்ன என்று தோன்றுகிறதா? வாங்க தெரிந்து கொள்வோம்.
World Rotaract Day (உலக ரோட்ராக்ட் தினம்)
உலக ரோட்ராக்ட் தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 13 அன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாள் ரோட்ராக்ட் அமைப்பின் சமூக சேவையை நினைவுகூரும் நாளாக கருதப்படுகிறது .
ரோட்ராக்ட் என்பது இளைஞர்களுக்கான சேவை அமைப்பு ஆகும். இது Rotary International அமைப்பின் ஒரு பகுதியாக செயல்படுகிறது. 18 முதல் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் இதில் உறுப்பினர்களாக இருக்கலாம்.
சமூக சேவை மற்றும் மனிதநேயத்தை வளர்ப்பதே முக்கிய நோக்கமாக இந்த அமைப்புகள் செயல்படுகின்றன.
கல்வி, சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ரோட்ராக்ட் கிளப்புகளின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.
உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான ரோட்ராக்ட் கிளப்புகள் செயல்படுகின்றன. இளைஞர்களின் தலைமைத்திறனை வளர்க்க இந்த அமைப்புகள் உதவுகின்றன. சமூகத்தில் நல்ல மாற்றத்தை உருவாக்க இளைஞர்களை ஊக்குவிக்கிறார்கள். வறியவர்களுக்கு உதவி செய்வது ரோட்ராக்ட் அமைப்பின் முக்கிய பணிகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

மரக்கன்றுகள் நடுதல் போன்ற சுற்றுச்சூழல் பணிகளை சிறப்பாக தனது குழுவின் மூலம் செய்கிறார்கள். இரத்த தானம் மற்றும் மருத்துவ முகாம்கள் நடத்தப்படுத்து பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கும், ஏழை எளிய மக்களுக்கும் உதவி செய்கிறார்கள்.
ஏழை எளிய மக்கள் கல்வி வசதிகளை தடையின்றி பெறுவதற்கு கல்வி உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன.
பேரிடர் காலங்களில் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் அனைத்து மக்களும் பயன் பெறும் வகையில், அவர்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து பணிகளை சிறப்பாக செய்கிறார்கள்.
ரோட்ராக்ட் இளைஞர்களை நல்ல குடிமக்களாக உருவாக்கி, உலக நாடுகளுக்கு இடையே நட்புறவை வளர்க்க நல்ல பண்புகளை உருவாக்குகிறார்கள். சமூக சேவையின் மதிப்பை இளைஞர்களுக்கு உணர்த்துகிறது. இன்றைய மாணவர்கள் நாளைய தலைமுறை உருவாக்குவார்கள் என்ற கருத்தை மையமாக வைத்து இளைஞர்கள் சமூகத்தில் பொறுப்புணர்வுடன் செயல்பட தூண்டுகோலாக இருக்கிறார்கள்.
உலக ரோட்ராக்ட் தினத்தில் இளைஞர்களின் சேவையை மதித்து அவர்களுக்கு உதவி செய்வோம். ஒவ்வொரு இளைஞரும் நமது இந்திய நாட்டிற்காக நம்மால் முடிந்து சேவைகளை செய்வோம் என உறுதிமொழி எடுத்துக் கொள்வோம்.
(த.சுகந்தி, மயிலாடுதுறையைச் சேரந்தவர். அருள் தமிழ் இலக்கியம்,மயிலாடுதுறை அமைப்பை நடத்தி வருகிறார். ஆத்திச்சூடி 109, நாலடியார், திருக்குறள் போன்ற தொகுப்பு நூல்களில் சிறுகதை ஒன்று எழுதி உள்ளார். பாரதியார் நவீன ஆத்திச்சூடி எழுதி மகாகவி பாரதி விருது பெற்றுள்ளார். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கிறார்)
விஜய்யின் திடீர் திருச்செந்தூர் விசிட்...யாருப்பா அந்த ஜோசியர்?
துப்பாக்கி ஏந்திய ராணுவத்தினரின் பெரிய வேன் முன் செல்ல.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்.. 3)
சமையல் துணுக்குகள்: ஹோட்டல் ஸ்டைல் பூரி மற்றும் உருளைக்கிழங்கு மசாலா!
Sripriya Story: தன்னம்பிக்கை கதை.. சிவப்பு மை கொடுத்த சிகரம்!
மனத்தின் மடை திறந்ததே!
Trust is based on the actions .. செயல்களில்தானே எல்லாமே!
Tireless Days .. சத்தமில்லாமல் வரும் விடியல் எனும் தோழன்!
Right people will stay to figure it out with you
சிந்தனைச் சிதறல். . உணவும் ஓய்வுமே உழைப்பிற்கான ஆற்றல் மூலம்!
{{comments.comment}}