11 கிலோ கஞ்சாவை எலி சாப்டுருச்சு..  அதிர வைத்த போலீஸ்.. விடுதலையான குற்றவாளிகள்!

Jul 04, 2023,05:01 PM IST
சென்னை: சென்னையில் போலீஸ் ஸ்டேஷனில் வைக்கப்பட்டிருந்த 11 கிலோ கஞ்சாவை எலிகள் தின்றுவிட்டதாக போலீசார் கூறியதையடுத்து, குற்றத்தை நிரூபிக்கத் தவறியதாகக் கூறி கஞ்சா வழக்கில் கைதான இருவரையும் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

சென்னையில் கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் 27ம் தேதி மாட்டாங்குப்பம் பகுதியில் 22 கிலோ கஞ்சா வைத்திருந்ததாக, ஆந்திராவைச் சேர்ந்த ராஜகோபால் மற்றும் நாகேஸ்வர ராவ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்த கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இந்த கஞ்சா, ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் இருந்து கொண்டு வரப்பட்டதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தனர். 



இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள போதைப்பொருள் தடுப்புப் பிரிவு நீதிமன்றத்தில், இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, பறிமுதல் செய்யப்பட்ட 22 கிலோ கஞ்சாவில் 11 கிலோ கஞ்சாவை எலிகள் தின்றுவிட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. குற்றப்பத்திரிகையில் உள்ளபடி 22 கிலோ கஞ்சாவை தாக்கல் செய்யாமல், சிறிய அளவிலான கஞ்சாவை மட்டுமே சமர்ப்பித்துள்ளதாக கூறியதுடன், போலீசாரால் குற்றச்சாட்டை நிரூபிக்க முடியவில்லை எனக் கூறி, கஞ்சா வியாபாரிகள் 2 பேரையும் விடுதலை செய்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

தேங்காய் தின்னும் எலியைப் பார்த்திருக்கிறோம்.. மற்ற தின் பண்டங்களைத் தின்பதையும் கூட கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் இப்படி கஞ்சாவைத் தின்ற எலிகள் சென்னையில் ஊடுறுவியிருப்பது உண்மையிலேயே ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. கஞ்சாவைத் தின்ற எலிகளுக்கு என்ன ஆனது.. அவை போதையில் என்ன செய்தன.. எங்கே போயின.. உயிருடன் இருக்கின்றனவா அல்லது செத்துப் போய் விட்டனவா என்று தெரியவில்லை.

சமீபத்திய செய்திகள்

news

"தனிமைப்பட்டு நிற்கிறார் CM" – காவிரி விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்

news

கொளத்தூர் தொகுதியில் தேர்தல் முறைகேடு? - திமுக என்.ஆர்.இளங்கோ பரபரப்பு பேட்டி!

news

வணிக பயன்பாட்டு எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.200 குறைவு: ஓட்டல் உரிமையாளர்கள் நிம்மதி!

news

வேளாண் பட்ஜெட் 2026: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைத்து சிறப்பு பூஜை செய்த அமைச்சர் வினோத்!

news

மாற்றுத்திறனாளிகள்..கட்டணச்சலுகைஇல்லாவிட்டாலும் UDID அட்டை இருந்தால் சிறப்பு பெட்டிகளில் பயணிக்கலாம்

news

அது துணியல்ல... உன் நம்பிக்கையின் ஆகாயம்!

news

தோப்பு வெங்கடாசலம் கட்சிப் பொறுப்பிலிருந்து விடுவிப்பு: திமுக தலைமை அதிரடி அறிவிப்பு!

news

ராகுல் காந்தி சென்னை வருகை: காங்கிரஸ் உற்சாக வரவேற்பு

news

தமிழ்நாட்டில் இன்று முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் : 33 கேள்விகள் கேட்கப்படும்

அதிகம் பார்க்கும் செய்திகள்