பாஜக தலைவர் "தேர்தல்".. சவுக்கு சங்கர் "வெற்றி".. கலகலக்கும் டிவிட்டர்!

Mar 20, 2023,03:54 PM IST
சென்னை : அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் கோர்ட் வரை போய் பரபரப்பை கிளப்பி வருகிறது என்றால்,  பாஜக தலைவர் தேர்தல் அகில இந்திய அளவில் ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டு வருகிறது. அதிமுக - பாஜக கூட்டணி பற்றிய பேச்சு ஒரு பக்கம், பாஜக.,விற்குள் யாருக்கு வாய்ஸ் அதிகம் என்ற பேச்சு ஒரு பக்கம் என திரும்பிய பக்கமெல்லாம் தமிழக அரசியலில் அதிமுக, பாஜக கட்சிகள் பற்றியதாக தான் உள்ளது.

இதற்கு இடையில் சவுக்கு சங்கர் ட்விட்டரில் சர்வே ஒன்றை நடத்தி, ஹாட் டாக்கை இன்னும் ஹாட்டாகவும், கலாய்க்கவும் வைத்துள்ளார். சவுக்கு சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில், பாஜக தலைவராக தகுதியானவர் என குறிப்பிட்டு, கீழே அண்ணாமலை, வினோஜ் பி செல்வம், அமர் பிரசாத் ரெட்டி, சவுக்கு சங்கர் என நான்கு ஆப்ஷன்களை வேறு குறிப்பிட்டுள்ளார்.

முதல் மூன்று பெயர்கள் ஓகே, கடைசியாக தனது பெயரையும் சவுக்கு சங்கர் குறிப்பிட்டுள்ளதை பார்த்து, நெட்டிசன்கள் ஷாக் ஆகி உள்ளனர். அண்ணே நீங்களுமா? என பலரும் கேட்டுள்ளனர். இன்னும் சிலர் ஒரு படி மேலே போய், சவுக்கு சங்கருக்கு 57 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்திருப்பதாக கூறி உள்ளனர். 




அண்ணே நீங்க போனால் அந்த கட்சிய திருத்தி நல்ல படியாக மாத்திடுவீங்க என கமெண்ட் செய்துள்ளனர். ஒரு சிலர், நான் உங்க கட்சியில் ஐடி அணியில் சேரலாமா என தங்கள் பங்கிற்கு துண்டு போட்டு வைக்கின்றனர். அதிமுக தலைவர் ஆகும் தகுதி யாருக்கு உள்ளது என்ற சர்வேயிலும் சவுக்கு சங்கர் பெயரையும் சேர்த்துள்ளனர். 

சவுக்கு சங்கர் போட்டுள்ள ட்வீட்டிற்கு நெட்டிசன்கள் தங்களின் கற்பனை குதிரைகளை தட்டி விட்டு, கமெண்ட்களை குவித்து வருகின்றனர். ஆனால் இந்த ட்வீட்டை பாஜக.,வை கலாய்ப்பதற்காக அவர் பதிவிட்டாரா அல்லது தன்னை தானே கலாய்த்து கொள்வதற்காக பதிவிட்டுள்ளாரா என்ற டவுட்டும் பலருக்கும் வந்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

இடஒதுக்கீடு என்பது மக்களுக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்துக் கொடுப்பது: ராமதாஸ்

news

திமுக அரசில், ஊழலும், மோசடியும் நடைபெறாத துறையே இல்லை என்பது உறுதி: அண்ணாமலை

news

டிசம்பர் 18ல் ஈரோட்டில் விஜய் பிரச்சாரத்திற்கு எந்தத் தடையும் இல்லை: செங்கோட்டையன் பேட்டி

news

டிசம்பர் 15ம் தேதி சென்னை வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா

news

குடிமகன்களே அலர்ட் இருங்கப்பா..குடிச்சிட்டு வந்து மனைவிய அடிச்சா மட்டுமில்ல திட்டினாலே..இனி களி தான்

news

காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.. பழமொழியும் உண்மை பொருளும்!

news

தாழ்த்த நினைத்த தீமைகள்.. தடமாய் இருந்து உயர்த்தும்!

news

இளமையே....எதைக் கொண்டு அளவிடலாம் உன்னை?

news

வைக்கதஷ்டமி திருவிழா.. வைக்கம் மகாதேவர் கோவில் சிறப்புகள்.. இன்னும் தெரிஞ்சுக்கலாம் வாங்க!

அதிகம் பார்க்கும் செய்திகள்