சென்னை : சென்னையின் பல பகுதிகளில் அதிகாலை முதலே திடீரென மழை கொட்டி தீர்த்து வருவதால் சென்னை மக்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். வெப்பமும் சற்று தணிந்துள்ளது.
சென்னையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. இதனால், இப்போதே இப்படி என்றால் கோடை காலத்தை எப்படி சமாளிக்க போகிறோமோ என சென்னைவாசிகள் புலம்பி வந்தனர். கோடை துவங்குவதற்கு முன் கோடை கால உணவுகள் போன்றவற்றிற்கு மக்கள் மாறி வந்தனர். இந்நிலையில் இன்று (மார்ச் 17) அதிகாலை முதலே சென்னையின் பல பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.
கிண்டி, சைதாப்பேட்டை, ஆலந்தூர், அசோக் நகர், தி.நகர், ஈக்காட்டுத்தாங்கல், வடபழனி, கோயம்பேடு, சென்னை விமான நிலையம், தாம்பரம், மயிலாப்பூர் உள்ளிட்ட பல பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. 10.4 மி.மீ., என்ற அளவில் மழை பதிவானது. இந்நிலையில் அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் அடுத்த சில மணி நேரங்களில் 23 மி.மீ., வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், அடுத்த 48 மணி நேரத்திற்கு சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யும் என்றும் சென்னை ரெயின்ஸ் தெரிவித்துள்ளது.
மழை தீவிரமடைந்துள்ளதால் சாலைகளில் தண்ணீர் தேங்கும் என்பதாலும், போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதாலும் 100 அடி சாலை பகுதியை மக்கள் தவிர்க்கும் படியும் கேட்டுக் கொண்டுள்ளது. மழை காரணமாக சென்னையின் பல பகுதிகளில் போக்குவரத்து மெதுவாகவே நகர்ந்து வருவதால், பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.
கடுமையான வெயில் கொளுத்தி வந்த நிலையில், திடீரென கொட்டும் மழையால் சென்னையில் வெப்பம் சற்று தணிந்துள்ளது. இதனால் மக்கள் செம குஷியாகி உள்ளனர்.
இந்த மழை 2 நாட்களுக்குப் பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!
{{comments.comment}}