Sunday சிந்தனை: பிடிச்சு சாப்பிடலாமா அல்லது பசிச்சு சாப்பிடலாமா.. எது நல்லது?

Jul 02, 2023,11:18 AM IST
- சுபா

சென்னை: எப்படி சாப்பிட்டால் நல்லது.. இந்தக் கேள்விக்கு மட்டும் இதுவரை தெளிவான பதிலை ஒருவராலும் சொல்ல முடியவில்லை.

"நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்"..  இந்த பழமொழி எல்லாத்துக்குமே தெரிந்திருக்கும்.. இப்போ இருக்கிற இந்த நாகரிகம் உலகத்தில நாம நோய் இல்லாம இருக்கிறதுதான் நமக்கு  கிடைச்ச பெரிய வரமாகும்.  ஆனால் நோய் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதில்தான் பலருக்குத் தெளிவில்லை.

முன்பெல்லாம் சாப்பாடு நிறைய சாப்பிட்டோம்.. ஆனால் இன்று சாப்பாட்டை குறைத்து விட்டு மருந்து மாத்திரைகளை நிறைய சாப்பிடும் நிலைக்குப் போய் விட்டோம்..  இதற்குக் காரணம் முன்பு வெகு அரிதாக இருந்த நோய்கள் எல்லாம் இன்று மக்கள் மத்தியில் மலிந்து போய் விட்டது. இதற்கு நமது வாழ்க்கை முறையும், சாப்பிடும் பழக்கமும் நிறைய மாறிப் போய் விட்டதுதான்.




இது ஒரு பக்கம் இருக்க..  இன்னொரு பக்கம் நமக்கு புடிச்ச உணவு சாப்பிடுவது நல்லதா?? அல்லது ஆரோக்கியத்துக்கு ஏற்ப சாப்பிடுவது நல்லதா ?? என்று ஒரு விவாதமும் ஓடிட்டுதான் இருக்கு. உங்களை கேட்டா நீங்க என்ன சொல்லுவீங்க..?? சிலருக்கு, நமக்கு பிடிச்ச உணவு சாப்பிடுவது தான் நல்லதுன்னு  கருத்து இருக்கும். சிலருக்கு உடம்பு முக்கியமாச்சே.. ஸோ, ஆரோக்கியத்துக்கு தேவையானதை மட்டுமே சாப்பிட வேண்டும் என்று சொல்வாங்க. 

இந்த இரண்டும் ஒரு பக்கம் இருக்கட்டும்.. நம்மோட கருத்து என்னன்னா, பிடிச்சதை தாராளமாக சாப்பிடலாம்.. ஆனால் அளவோடு இருக்க வேண்டும். அளவுக்கு மீறினால் அமிர்தமும் கூட நஞ்சுதான். எனவே ருசிக்கு   சாப்பிடும் அதே நேரத்தில், உடம்பு ஆரோக்கியத்தையும் மனதில் கொண்டுஅளவோடு சாப்பிட்டு.. நா காப்பது நல்லதுதானே.

அதேபோல வள்ளுவரும் கூட சாப்பிடும் முறை குறித்து அழகாக கூறியுள்ளார். முதலில் உண்ட உணவு ஜீரணமாகிவிட்டதா என்று அறிந்த பிறகு தான், அடுத்த வேளை உணவு சாப்பிட வேண்டும். இதனை  "மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்" என்ற குறளில் விளக்கியுள்ளார்.

இப்போ உங்களுக்கு புரிந்திருக்கும் எவ்வளவு சாப்பிடணும் .. எப்படி சாப்பிடணும் என்பது.. இன்னிக்கு சன்டே.. ஸோ, ஜாலியா இருங்க.. நல்லா சாப்பிடுங்க.. கூடவே கவனமாவும் சாப்பிடுங்க..!

ஹேப்பி சன்டே மக்களே!

சமீபத்திய செய்திகள்

news

பஹல்காம் ரத்தம் இன்னும் காயவில்லை.. அதற்குள் பாகிஸ்தானுடன் விளையாட்டா?.. பிசிசிஐக்கு எதிர்ப்பு!

news

முதல்வரின் கோரிக்கை மனு... தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியிடம் வழங்கப் போவது யார் தெரியுமா?

news

தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டம்!

news

நான் வெற்றி பெற்றவன்.. இமயம் தொட்டு விட்டவன்.. பகையை முட்டி விட்டவன்.. கமலுக்கு வைரமுத்து வாழ்த்து!

news

திமுக ஆட்சியின் போலீசுக்கே பாதுகாப்பு இல்லை... சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது: எடப்பாடி பழனிச்சாமி

news

கோவை, நீலகிரிக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வைகோவால் மனஉளைச்சல்.. ஆகஸ்ட் 2ம் தேதி உண்ணாவிரதம்.. அறிவித்தார் மல்லை சத்யா

news

கார்கில் வெற்றி தினம்.. தியாகிகளின் நினைவிடத்தில் குடும்பத்தினர், பொதுமக்கள் வீர அஞ்சலி

news

தாய்லாந்து-கம்போடியா எல்லை மோதல்.. கவனமாக இருக்குமாறு இந்தியர்களுக்கு அறிவுரை

அதிகம் பார்க்கும் செய்திகள்