தோனிக்குப் பிறகு ஒருத்தருக்கும் கிடைக்காத ஐசிசி கோப்பைகள்.. தொடரும் சோகம்!

Jun 12, 2023,10:13 AM IST

சென்னை: தோனி கேப்டனாக இருந்தபோதுதான் இந்திய கிரிக்கெட் அணி அதிக அளவிலான ஐசிசி கோப்பைகளை வென்றது. அதன் பின்னர் அவர் போன பிறகு இந்தியா எந்த ஒரு ஐசிசி கோப்பையையும் வெல்ல முடியாத அவல நிலை தொடர்கிறது.

லண்டனில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா மிகப் பெரிய தோல்வியைத் தழுவியுள்ளது. 209 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி உலக டெஸ்ட் சாம்பியன் ஆகியுள்ளது ஆஸ்திரேலியா. 



இந்த போட்டியில் இந்தியா பல தவறுகளைச் செய்தது. அஸ்வினை சேர்க்காதது அதில் முக்கியமான தவறாகும். சூழ்நிலைகளைக் காரணம் காட்டி அஸ்வினை அணியில் சேர்க்காமல் விட்டு விட்டது இந்திய அணி. அடுத்து இந்திய பேட்டிங் வரிசை சுதாரிப்புடன் ஆடத் தவறியது. இந்தப் போட்டியில் எந்த ஒரு கட்டத்திலும் ஆஸ்திரேலியா அணிக்கு இந்தியா நெருக்கடியே கொடுக்கவில்லை என்பது  பெரிய சோகமாகும்.

தோனி இல்லாமல் தொடரும் தோல்விகள்

தோனி கேப்டனாக இருந்த சமயத்தில் பல ஐசிசி  கோப்பைகளை இந்தியா வென்றிருந்தது. உண்மையில், தோனி தலைமையில்தான் இந்திய  கிரிக்கெட் அணி அதிகஅளவிலான ஐசிசி கோப்பைகளை வென்றுள்ளது என்பது ஒரு வரலாற்று சாதனையாகும்.

அவர் ஓய்வு பெற்ற பிறகு 2 கேப்டன்கள் வந்து விட்டார்கள். முதலில் விராட் கோலி கேப்டனாக இருந்தார். தற்போது ரோஹித் சர்மா கேப்டனாக இருக்கிறார். இருவருமே சர்வதேச அளவில் பெரிய கோப்பை எதையும் வெல்லவில்லை என்பது பெரிய குறையாகவே உள்ளது.

2019-2021 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூசிலாந்திடம் தோல்வியுற்ற இந்தியா தற்போது ஆஸ்திரேலியாவிடம் தோல்வியைத் தழுவியுள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான போட்டியை விராட் கோலி தலைமையில் சந்தித்திருந்தது இந்தியா.

2021 -2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் மிகப் பெரிய தோல்வியைச் சந்தித்துள்ளது இந்தியா. இம்முறை கேப்டனாக இருந்தவர் ரோஹித் சர்மா.

ஐசிசி ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை இதுவரை 2 முறை மட்டுமே இந்தியா வென்றுள்ளது. 1983ம் ஆண்டு கபில்தேவ் தலைமையில் முதல் கோப்பை கிடைத்தது. 2011ல் தோனி தலைமையில் 2வது கோப்பை வந்தது. அதன் பிறகு இந்தியா உலகக் கோப்பையை வெல்ல முடியாமல் தவிக்கிறது.

2007ம் ஆண்டு நடந்த ஐசிசி முதலாவது டி20 உலகக் கோப்பைத் தொடரில் இந்தியா தோனி தலைமையில் அதிரடி காட்டி கோப்பையை வென்று வந்து அசத்தியது. அதன் பிறகு நமக்கு டி20 உலகக் கோப்பை இதுவரை கிடைக்கவில்லை.

2013ம் ஆண்டு ஐசிசி  சாம்பியன்ஸ் டிராபியை தோனி தலைமையிலான இந்திய அணி வென்றது. அந்தத் தொடர் தற்போது நிறுத்தப்பட்டு விட்டது.

இந்திய கிரிக்கெட் அணியைப் பொறுத்தவரை (உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பைத் தவிர) அனைத்து ஐசிசி கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டனாக தோனி மட்டுமே திகழ்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்.. முதல்வர் விஜய் போட்ட ஸ்டிரிக்ட் உத்தரவு

news

இடைத்தேர்தல் களம்: தாராபுரம், மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் 4 நாட்கள் பிரச்சாரம்

news

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணம் : கடுமையாக விமர்சித்த டி.ஆர்.பி. ராஜா

news

அதிமுக நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பெயர் மிஸ்ஸிங்

news

புரட்டாசி சனிக்கிழமையில் பெருமாளை வழிபட்டால்.. குடும்பத்தில் வளம் பெருகும்!

news

ரூ.100 கோடி மோசடி வழக்கு: மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆஜர்

news

புரட்டாசி மாதம் வந்தாச்சு.. 6வது தமிழ் மாதம்.. பெருமாள் வழிபாட்டுக்கு உகந்த புனித மாதம்!

news

த.வெ.க அரசின் முதல் சட்டப்பேரவைக் தொடர்: 12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்!

news

நமநமக்கும் வாய்கள்.. கலகலக்கும் வயிறுகள்.. புரட்டாசி மாத அலப்பறைகள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்