கையில் கடித்த கட்டுவிரியன்பாம்பு.. கோமா நிலைக்குச் சென்ற சிறுவன்.. மீண்டு வந்த அதிசயம்!

May 31, 2024,01:48 PM IST

நாகப்பட்டனம்: நாகப்பட்டனத்தில் கட்டுவிரியன் பாம்பு கடித்து கோமா நிலைக்கு சென்ற 10 வயது சிறுவன், நாகை அரசு மருத்துவர்களின் தீவிர சிகிச்சையால் பூரண குணமடைந்துள்ளார். அந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது.


கட்டு விரியன் பாம்பின் விஷம் நரம்பு மண்டலத்தைத் தாக்கும். இந்த பாம்பு கடித்தவர்களின் தசை பகுதிகள் செயலற்றதாக்கி விடும் தன்மை கொண்டதாகும். இந்த கொடிய விஷம் கொண்ட பாம்பு கடித்தால் கிட்டதட்ட 1 மணி நேரத்தில்  இறந்து விடுவார்களாம். மூச்சு மண்டலம் செயலிப்பதாலேயே பொதுவாக உயிர் இழப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது. இத்தகைய கொடிய விஷம் கொண்ட பாம்பு கடித்த 10 வயது சிறுவன் தற்பொழுது முழு உடல் நலத்துடன் மீண்டு அனைவரையும் அதிசயிக்க வைத்துள்ளார்.




நாகை மாவட்டம் மூகனூரைச் சேர்ந்தவர்  மாரியப்பன். இவரது  10 வயது மகன் திவாகர்.  மே 18ம் தேதி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது சிறுவனின் கையில் கொடிய விஷம் கொண்ட கட்டு விரியன் பாம்பு கடித்தது. இதில் சிறுவனின் நரம்பு மண்டலம் கடுமையாக பாதிக்கப்பட்டு உடல் உறுப்புகள் செயல் இழந்தன. சிறுவனின் பெற்றோர்கள் சிறுவனை நாகையில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். நாகை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ குழுவினர் வென்டிலேட்டர் உதவியுடன் திவாகருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.


தொடர்ந்து 7 நாட்களாக மருத்துவ குழுவினர் தீவாகருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், பூரண உடல் நலம் பெற்று சிறுவன் திவாகர் நேற்று வீடு திரும்பினார். அவனது பெற்றோர்கள் மருத்துவர்களுக்கு மனம் உறுகி நன்றி தெரிவித்தனர். கட்டு விரியன் பாம்பு கடித்து கோமா நிலைக்கு போய் தற்போது நல்ல நிலையில் உள்ள சிறுவனைப்பார்த்து மாரியப்பன் வீட்டின் அருகில் இருப்பவர்கள் வியந்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்