சென்னை: முதல்வர் மு. க ஸ்டாலின் தலைமையில், இன்று மாலை 6.30 மணிக்கு தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. இதில் புதிய தொழில் முதலீடுகள் மற்றும் புதிய திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.
2025 -26 ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் தாக்கல் கடந்த மாதம் 14ஆம் தேதி தொடங்கி, தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த கூட்டம் இம்மாத இறுதியில் 29ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதற்கிடையே பேரவையில் துறை ரீதியான மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இதற்கு அந்தந்த துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். மேலும் ஒவ்வொரு துறை ரீதியாக பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அதே சமயத்தில் மத்திய- மாநில அரசுகளுக்கு இடையேயான தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில், தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று மாலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உட்பட பல அமைச்சர்கள் கலந்து கொள்ளும் இந்த கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு அனுமதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட புதிய திட்டங்களுக்கான ஒப்புதல் அளிப்பது தொடர்பாக விவாதிக்கப்படலாம் என்று தெரிகிறது.
டெல்லியிலும், சுற்று வட்டாரத்திலும்.. விடிஞ்சு வந்து பார்த்தா.. ஒரே smog.. இயல்பு நிலை பாதிப்பு
இடஒதுக்கீடு என்பது மக்களுக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்துக் கொடுப்பது: ராமதாஸ்
திமுக அரசில், ஊழலும், மோசடியும் நடைபெறாத துறையே இல்லை என்பது உறுதி: அண்ணாமலை
டிசம்பர் 18ல் ஈரோட்டில் விஜய் பிரச்சாரத்திற்கு எந்தத் தடையும் இல்லை: செங்கோட்டையன் பேட்டி
டிசம்பர் 15ம் தேதி சென்னை வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா
குடிமகன்களே அலர்ட் இருங்கப்பா..குடிச்சிட்டு வந்து மனைவிய அடிச்சா மட்டுமில்ல திட்டினாலே..இனி களி தான்
காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.. பழமொழியும் உண்மை பொருளும்!
தாழ்த்த நினைத்த தீமைகள்.. தடமாய் இருந்து உயர்த்தும்!
இளமையே....எதைக் கொண்டு அளவிடலாம் உன்னை?
{{comments.comment}}