இரு கண்களும் மூடி.. உன் வாசமே என் சுவாசம்.. ஆஹா!

Aug 05, 2023,12:00 PM IST
- மீனா

காலை விடிந்ததும்
என் கண்கள் தேடுவது உண்ணைத்தான்
உன் வாசமே என் சுவாசம்
இரு கண்களையும் இறுக மூடிக் கொண்டு
உன்னை நினைக்கும்போது
ஆஹா.. என்ன ஒரு சந்தோஷம்.. உற்சாகம்
நீ இல்லாத நாளை பொழுதை நினைத்துப் பார்க்க முடியுமா!
மணிக்கு ஒரு முறையாவது 
உன்னை பார்க்க ஏங்குகிறேன்!
உன்னை பார்க்கவில்லை என்றால் 
நாவெல்லாம் வறண்டு.. மனதெல்லாம் சோர்ந்து போகிறது
உன் திசை நோக்கி ஓடி வரும் என் மனம்
வெட்டியாக இருந்தாலும் சரி
வேலையில் இருந்தாலும் சரி
இடைவிடாமல் உன்னையே நேசிக்கிறேன்!
இருந்த இடத்திலேயே மெய்மறக்க செய்கிறாயே
என்ன மாயம் இது..?


இந்த ஒரு ஜென்மம் போதாது 
எத்தனை ஜென்மம் பிறந்தாலும்.. 
நீ என்னோடே இருக்க வேண்டும்
உன்னைச் சுற்றியே நான் ஓடிக் கொண்டிருக்க வேண்டும்
என்னை விட எனக்கு உன்னை தான் அதிகம் பிடிக்கிறது !
உன்னை நினைக்காமல் இருக்க மனம் மறுக்கிறது!
வீட்டில் இருந்தாலும் வெளியில் இருந்தாலும் 
முதலில் தேடுவது உன்னைத்தான் 
நீ எங்கே.. என் அன்பே என்று!
இடையிடையே ஓடி வந்து அள்ளிப் பருகி ஆனந்திக்க துடிக்கிறேன்
ஆனால் என் செய்வது.. 
நீ கொதிநிலையில் இருப்பதால் 
"கப்"பில் ஊற்றி கொடுத்து விடுகிறார்கள் 
என் 
அருமை "காபி"யே!

சமீபத்திய செய்திகள்

news

மதுரை அரசாளும்.. மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்.. 17 ஆண்டுகளுக்குப் பிறகு!

news

பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் கட்டினால்...என்ன அதிமுக ஜெயக்குமார் இப்படி சொல்லிட்டார்?

news

சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில் தேங்காய் வைத்து பூஜை...இது நடக்க போவது உறுதியா?

news

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல்: திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு!

news

முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: சேகர்பாபு, ஆ.ராசா மீது வழக்குப்பதிவு

news

காலம் மாறிப் போச்சு.. ஒரு நிமிடக் கதை (17)

news

வாயை மூடு

news

உன் மொய் குழலுக்கு பூமாலை சூட்டவோ!

news

தண்ணிக்குள்ள ராஜா தான் தவழுகிறே மாசு தான்!

அதிகம் பார்க்கும் செய்திகள்