டெல்லி: இது எந்த ஊர் என்று தெரியவில்லை. ஆனால் பார்க்க படு காமெடியாக இருக்கிறது. அதாவது பந்து வீச வந்த பவுலர் ஒருவரை பார்த்து நாய் துரத்தியதால் அவர் பயந்து ஓடியகாட்சி அடங்கிய இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.
வந்த வேகத்தில் பின்னால் திரும்பி அந்த பந்தை நாய் மீது அடித்து விட்டு அவர் தப்பினார். நாயும் அவரை விட்டு ஓடிவிட்டது. இப்படி ஒரு வீடியோ வைரலாக பரவி வருகிறது.
கிரிக்கெட் மோகம் கொண்ட நாடுகளில் ஒன்றுதான் இந்தியா. இந்தியா மட்டுமல்லாமல் பக்கத்தில் இருக்கிற இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான் என எல்லாமே கிரிக்கெட் மோகம் கொண்டோர் அதிகம் உள்ள நாடுதான். இங்கெல்லாம் எல்லா தெருக்களிலும் ஏதாவது ஒருவர் கிரிக்கெட் விளையாடுவதை நம்மால் பார்க்க முடியும். கிரிக்கெட் என்றால் பைத்தியமாக திரிவோர் இந்த நாடுகளில் அதிகம். கிரிக்கெட்டை ஒரு மதமாகவே பலரும் இங்கு பார்க்கிறார்கள். உலகக் கோப்பை கிரிக்கெட் போன்றவை நடக்கும் போது எல்லா வேலைகளையும் விட்டுவிட்டு கிரிக்கெட் முன்னாடியே திரிவோரும் இங்கு அதிகம்.

இந்த வீடியோவில் ஒரு கலகலப்பான கிரிக்கெட் போட்டியை பார்க்க முடிகிறது. ஒரு கிரிக்கெட் போட்டி நடந்து கொண்டிருக்கிறது. ஏதோ ஒரு காலி கிரவுண்ட் போல தெரிகிறது. எந்த ஊருன்னு தெரியல எந்த நாடு தெரியல. ஒரு நாலு பேர் சேர்ந்து விளையாடிட்டு இருக்காங்க. அப்போ ஒரு பவுலர் பந்து வீச வருகிறார். அவர் வேகமாக ஓடி வருவதைப் பார்த்து அந்த அந்த மைதானத்தில் இருந்த நாய் ஒன்று அவரை துரத்துகிறது. உடனே அவர் பயந்து போய் பின்னால் திரும்பி ஓடுகிறார். பார்க்க சுவாரஸ்யமாக இருக்கிறது காமெடியாகவும் இருக்கிறது.
அந்த நாய் அவரை திரும்பத் திரும்ப துரத்தியதையும் பார்க்க முடிந்தது. இதனால் நாயிடமிருந்து தப்பிப்பதற்காக அவர் நாய் மீது பந்தை எறிந்து தப்புகிறார். நாயும் ஓடி விட்டது. இந்த வீடியோ இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஒரே நாளில் 30,000 ஊழியர்களை வேலையை விட்டு தூக்கிய அமேசான்
தங்கம் நேற்றைய விலையை தொடர்ந்து இன்றும் குறைவு... அதுவும் சவரனுக்கு ரூ. 1,200 குறைவு!
தேர்தலுக்கு தயாராகும் தேர்தல் கமிஷன்...இன்று முதல் பயிற்சி ஆரம்பம்
மக்களே உஷார்...இன்று இரவு கரையை கடக்கிறது மோன்தா புயல்
திருச்செந்தூரில் நடைபெறும் சாயா அபிஷேகம் பற்றி தெரியுமா?
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 28, 2025... இன்று வெற்றிகள் தேடி வரும் ராசிகள்
தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையத்தின் SIR... நவ 2ல் அனைத்துக் கட்சிக் கூட்டம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்!
நெருங்கும் மோன்தா புயல்.. தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. வானிலை மையம் எச்சரிக்கை!
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: பலியானவர்களின் குடும்பங்களை சந்தித்து விஜய் ஆறுதல்!
{{comments.comment}}