சென்னை: மத்திய அரபிக்கடல் பகுதிகளில் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதியில் உருவாக இருப்பதால், தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும், சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியதாவது,
தென்மேற்கு பருவமழை கேரளாவில் அடுத்த மூன்று முதல் நான்கு தினங்களில் துவங்குவதற்கான வாய்ப்பு உள்ளது. அதே சமயத்தில் தமிழகத்தில் ஒரு சில பகுதிகளிலும் பரவுவதற்கான வாய்ப்புள்ளது.
வட கர்நாடகா- கோவா கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் இன்று காலை 8:30 மணி அளவில் ஒரு மண்டல மேலடுக்கு சுழற்சி உருவானது.இது அடுத்த 12 மணி நேரத்தில் அதே பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும். பிறகு இது வடக்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அடுத்த 36 மணி நேரத்தில் வலுவடைய கூடும்.
அதேபோல் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியில் இருந்து ஆந்திர கடலோர பகுதிகள் வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக இன்று தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும், சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது அதன்படி,
இன்று கன மழை:
நீலகிரி,கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
மிதமான மழை:
தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும், மே22 ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், மிதமான மழையை எதிர்பார்க்கலாம்.
சென்னை மழை:
சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அதேபோல் நாளை ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. அதிகபட்சம் வெப்பநிலை 35 முதல் 36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் ஒட்டியும் இருக்கக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.
அரபிக் கடலில் நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. இன்றும் கனமழைக்கு வாய்ப்பு..!
அனகாபுத்தூர் அடையாறு ஆற்றங்கரையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம் ஏன்?.. அரசு தரும் விளக்கம்
கன்னடம் பேச முடியாது என வாக்குவாதம் செய்த வங்கி அதிகாரி அதிரடியாக பணியிட மாற்றம்
வளையங்குளம் துயர நிகழ்வு.. இதுதான் இந்தியாவே வியக்கும் திமுக அரசின் 4 ஆண்டு காலச் சாதனையா? : சீமான்
மாதம் ரூ. 40 லட்சம் ஜீவனாம்சம் வேணும்.. பசங்களைப் பார்த்துக்கணும்.. ஆர்த்தி ரவி அதிரடி டிமாண்ட்!
எனக்கும் அன்புமணிக்கும் இடையே எந்த மனக்கசப்பும் இல்லை: டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
ரீவிசிட் அடிக்கிறதா கொரோனா.. நிலவரம் என்ன?.. டாக்டர் பரூக் அப்துல்லா சொல்வதைக் கேளுங்க!
தமிழ்நாட்டின் நிதி உரிமையை வெளிப்படுத்த.. 24ம் தேதி டெல்லி செல்கிறேன்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
உழவர்களின் நலனில் தமிழக அரசு அக்கறையின்றி செயல்படுவது கண்டிக்கத்தக்கது: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}