- கவிதை மழை அ.நவஜோதி அருண்
மகாநதிக்
கரையோரம்...
தன் காதலியைத்
தவறவிட்ட
காதலன்...
துயரத்தில்
துடிதுடிக்க,
தேடி எடுத்து
வந்தாள்...!
இறக்கை முளைத்த
தேவதை...!
கட்டழகி மூவரை...
உண்மை
சொல்வானா?
பேராசையில்
பொய்யுரைப்பானா?
.webp)
கூடவே
சோதித்தபடி
தேவதை....!
குறுகுறுவென
பார்த்திருக்க...
குறிப்பிட்ட
நேரத்தில்
சொல்லாவிட்டால்
எதுவுமே
கிடைக்காததென்றது...
சற்றும்
சிந்திக்காமல்
காத்திருக்கச்
சொல்லிவிட்டுப்
போனான்.
காதலன்...
நெடுநேரம்
காத்திருந்து
கால்வலித்த
தேவதை!
கன்னியரோடு
காணாமலே
போனது...
அவன்
எதைக்கேட்பது?
எப்படிக்கேட்பது?
யாரைக் கேட்பது?
உண்மையாய் கேட்பதா?
பொய்யாய் கேட்பதா?
ஒருத்தி மட்டும்
கேட்பதா?
ஒருத்தியையும்
விடாமல் கேட்பதா?
என்று
இன்னு........ம்
யோசனை கேட்டு,
பேசிக்கொண்டே
இருக்க....
பதிலுரைத்து
திணறிக் கொண்டு இருந்தது.
சேட்ஜிபிடி
வாசிக்க மறந்த
தலைமுறை
சுயமாய்...
யோசிக்கவும்
மறந்துவருதே!
(கவிதை மழை அ. நவஜோதி அருண்குமார், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர். கவிதைகள் எழுதி வருபவர். இசையில் நாட்டம் கொண்டவர். சமூக அக்கறையுடன் கூடிய படைப்புகளைக் கொடுத்து வருகிறார்)
உள்ளதும் போனது உணராதவன்!
திருப்பரங்குன்றம் கல்தூணில் நாளை தீபம் ஏற்ற சுப்ரீம் கோர்ட் உத்தரவு: அறங்காவலர் குழு கலைப்பு
காலங்கள் கடந்த ஞானம் காற்றில் அறுந்த பட்டம் போல்!
கடுக்காய் ஜோதிடர்
வாழ்க! வாழ்க!!
காதல்!
பேராசை பெருநட்டம்!
தமிழ்நாட்டில் இன்று நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் எச்சரிக்கை
தொகுதி மறு வரையறை: நாளை திமுக எம்.பி.,க்கள் கூட்டம் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
{{comments.comment}}