காதல்!

Nov 27, 2026,02:47 PM IST

- கலை கவி


சுடராக மனதில் விளைந்த  

சுவடு நீ! 


சாரலாக மனதில் விழுந்த  

துளி நீ! 


கவியாக மனதில் கரைந்த  

காவியம் நீ! 


தூரம் பிரிவுக்கு மட்டுமல்ல, 

புரிதலுக்கும்  தான், 

வாழ்க்கை வாழ மட்டுமல்ல 

வழங்குவதற்கும் தான். 




காதல் தொடுதல் மட்டுமல்ல 

தொடர்வதற்கும் தான். 


காதல், 

போதும் என்றாலும் பொங்கிடும், 

வேண்டாம் என்றாலும் வென்றிடும்  

விலகிச்சென்றாலும் விரைந்திடும்

 

மறைந்திடு என்றாலும் மலர்ந்திடும் 

ஏதுமின்றி சென்றாலும் யாதுமாகி நின்றிடும்  

முரணாக இருந்தாலும்,  

முளைத்திடும். 


(சொ.கலையரசி, மதுரை மாவட்டம் வாடிப்பட்டியைச் சேர்ந்தவர். தாய் CBSE பள்ளி வேதியியல் ஆசிரியையாக 3 ஆண்டுகள் பணிபுரிந்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக "எழுதுக" என்னும் புத்தகம் எழுதும் இயக்கத்தோடு இணைந்து எழுத்துப் பணியாற்றி வருகிறார். 1. புழுதிமண் கவிதைத்தொகுப்பு, 2. உடைந்தும் உருவெடு குறுநாவல் என இரு நூல்களைப் படைத்துள்ளார். இறையன்பு IAS முன்னிலையில் அவை வெளியிடப்பட்டன.)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்