- சசிகலா விஸ்வநாதன்
வினா எழுப்பும் முன்
சற்றே சிந்தியும்!
ஒற்றை மனிதன் அவனுக்காக மட்டும் வாழ்கிறான்!
பிழைகளையும்
சரியானவற்றையும்
மாறி மாறி செய்வது
பிழைப்புக்காக!
"பிழை" என்பதும்,
சரியாகும்.
"சரி" என்பதும், பிழையாகும்.
காலமெனும் மாயக்கண்ணாடி காட்டுவதெல்லாம் மாய பிம்பமே!

தனக்காக புவியில் வாழும் மனிதன்;
எப்படி உனக்காக
மட்டிலும்
உன்னைத் தேடுவான்?
தக்கன நிலைக்கும்!
வலியது வாழும்!
இது செகத்தின் உண்மை நிலையன்றோ?
பிழை பொறுத்தலும்,
பிழை நீக்கலும்,
பிழையை 'சரி' என்பதும்
'சரி'யை பிழை என்பதும்
உம் தர்மம் அன்றோ?
என்னில் நீ இருப்பதும்
உன் விருப்பம்!
(முந்தைய கவிதையில் விடையோன் எழுப்பிய வினாவுக்கு மனிதனின் விடை)
(சசிகலா விஸ்வநாதன் - தடய அறிவியல் துறையில் உதவி இயக்குநராக பணி நிறைவில் இருக்கும் முதியவள். அதிகம் அறியப்படாத நான்; இரண்டு வருடங்களாக ஓய்வு நேரத்தில் கவிதைகளும் சிறுகதைகளும் எழுதிக்கொண்டு இருக்கிறேன். எனது கதைகளும், கவிதைகளும், தமிழ் நெஞ்சம்; வானமே எல்லை; கொலுசு;மலர் வனம்; சக்தி பெண்ணிதழ்; ஆகியவற்றில் வெளியாகின்றன. புஸ்தகா நிறுவனம் மூலம் இது வரை நான்கு கதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளேன்)
தொகுதி மறு வரையறை: நாளை திமுக எம்.பி.,க்கள் கூட்டம் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
இயற்கை
ஐயனே!
சிந்தனைச் சிதறல்.. நாளைய விடியல் நமக்காக இருக்கும்!
பரிசு
Short Story: நல்ல பழக்கம்!
Chettinadu Recipes: வாய்க்குச் சுவையான ருசியில் எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி
பெரம்பூர் தொகுதி வெற்றியை எதிர்த்த வழக்கு : முதல்வர் விஜய்யின் மனு தள்ளுபடி
அம்பாசமுத்திரம், பெருந்துறை இடைத்தேர்தல் நடத்த தடையில்லை ; 3 தொகுதிகளுக்கு தடை நீடிப்பு
{{comments.comment}}