இயற்கை

Nov 27, 2026,01:27 PM IST

- மடிப்பாக்கம் பிரபாவதி


பஞ்சபூதங்களாய் இருக்கிறாய்

மரம் செடி கொடிகளாய் இருக்கிறாய்


வண்ண வண்ணப் பூக்களாய் இருக்கிறாய்

வாசம் வீசி மனம் மெய் இரண்டும் நிறைக்கிறாய்


சூரியனாய் சூடாகி நிலவாய் குளிர்கிறாய்

நட்சத்திரங்களாய் மிளிர்ந்து கண்களில் ஒளிர்கிறாய் 




தென்றலாய் வருடி தெம்மாங்கு பாடல் பாட வைக்கிறாய்

மும்மாரி பெய்து முத்துக் குளிக்க வைக்கிறாய்


கோடை மழையாகவும் பெய்து கொஞ்சம் சூடு தணிக்கிறாய்

இருந்தாலும் புயலாய், பூகம்பமாய் வந்து வாழ்வை சிதைக்கிறாய்


உனக்கும் கோபம் வரும் சீற்றம் வரும் என்றல்லவா காண்பிக்கிறாய்

நதியாய்  கடலாய் வானும் மண்ணுமாய் இடியாய் மின்னலாய்


நீராய் நெருப்பாய் காற்றாய் மலையாய் மடுவாய் மழையாய்

எத்தனை எத்தனை விதமாய் எங்களுக்கு காட்சியளிக்கிறாய்


உன்னை வணங்குகிறேன் 

உன்னோடு பிணைத்து வாழும் எனக்கு ஏற்றம் கொடு!


(எழுத்தாளர் பிரபாவதி, சென்னை மடிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர். பேக்கிடெர்ம் டேல்ஸ் (publishers) மூலம் ஏனையோருடன் சேர்ந்து 42 புத்தகங்களில் எழுதியிருக்கிறார். ராணி, விகடகவி, மலர்வனம், லேடீஸ் ஸ்பெஷல், விருட்சம், இறகுகள், தமிழ்நாடு இ பேப்பர், மின் கைத்தடி உள்ளிட்டவற்றில் இருபத்தி ஐந்துக்கும் மேல் சிறுகதைகள் எழுதியுள்ளார். தனது மகளுடன் இணைந்து ஒரே கதையை ஆளுக்கொரு அத்தியாயமாக எழுதி 2 புத்தகங்கள் வெளியிட்டுள்ளார். சின்னஞ்சிறு கதைகள் என்ற சிறுகதை தொகுப்பும், Booner to GenZ அலப்பறைகள் என்ற 35 பகுதிகள் அடங்கிய நாவலும் எழுதியுள்ளார்.)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்