- கவிஞர் க. யாஸ்மின் சிராஜுதீன்
ஆசையே அலைபோல தொடர்ந்து பாயும் மனம் அதிலே
அதிகமான ஆசையே பேராசை என பெயர் சூடுமே
ஆசை நம் வளர்ச்சியின் ஊக்கியே
பேராசை இருப்பதையும் அழிக்கும் எதிரியே
ஆசை நேர்வழியைக்காட்டும் வழிகாட்டியே
பேராசை பணம், பொருள், பதவியை அடைய தவறான வழிகளை காட்டுமே
நற்பெயரை அழிக்குமே
உறவினர்களை விலகிப்போகச் செய்யுமே
மன அமைதியை இழக்க செய்யுமே
பிறர் பொருளை அடைய விரும்புவதும் பேராசையின் ஒரு வடிவமே

பேராசை தவறான முடிவுகளை எடுக்கத் தூண்டுமே
அதிகமாகப் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்குமே
ஏமாற்றுதல், பொய் சொல்லுதல் போன்ற செயல்களில் ஈடுபட வைக்குமே
இறுதியில் இருப்பதையும் இழக்கச் செய்யுமே
துன்பம் மட்டும்தான் மிஞ்சுமே
இன்பத்தை அள்ளிச்சென்றுவிடுமே
தினமும் தங்க முட்டையிடும் வாத்து
பேராசைகொண்டு கொன்றதால்
தங்கமுட்டைபெறும் வாய்ப்பும் பறிபோனதே
பேராசை பெருநட்டத்தை நமக்கு உணர்த்துதே
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சே
அளவான ஆசை உயர்வைத் தருமே
அளவற்ற பேராசை அழிவைத் தருமே
நம்மிடம் இருப்பதைக் கொண்டு மகிழ்ச்சியாக வாழ வேண்டுமே
பிறருக்கு உதவி செய்து மகிழ வேண்டுமே
நேர்மையான வழியில் உழைத்து வாழ வேண்டுமே
பேராசையைத் தவிர்க்க வேண்டுமே
மனநிறைவுடன் வாழ்வதே சிறந்த வாழ்க்கையாகுமே
ஆசை இன்றி மனித வாழ்வு இல்லையே
பேராசைப்பட்டால் பெருநட்டம் என்பதில் ஐயமில்லையே
ஆசையே அலைபோல மீ்ண்டும் மீண்டும் அலைபாயும் மனம் எனும் கடல்மேலே
ஆசையை ஆசையாக அடைந்திடு
பேராசையாக உருவெடுக்காமல் தடுத்திடு
பேராசை பெருநட்டம் என்பதை என்றும் மனதில் பதித்திடு
(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன், இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்குப் பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும் whatsApp வழியாகக் கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்.)
{{comments.comment}}