- கவிதை மழை அ. நவஜோதி அருண்
யார்? கடவுளாவதென
தேர்தல் போட்டி
கடவுளுக்கும்
கவிஞனுக்கும்
நடந்தது....
கவிஞனின் வாக்குறுதி..
ஊருக்கு ஒரு நிலா இலவசம்...
நட்சத்திரங்களே
புலங்கிடும்
காசாகும்...
.webp)
மனிதனுக்கு
இருபுறம் இறக்கைகள்
இலவசம்...
உச்சந்தலையில் ஆளுக்கொரு
அரசன் கிரீடம்...
பால்வெளி
வெளிச்சம்
பகலிலும்
காணலாம்...
ஆகாயம்
அடிக்கடித்
தொட...
வாய்ப்பு
வழங்கலாம்...
நீரிலிருந்து
மின்சாரமில்லை
நிலவிலிருந்து
மின்சாரம்...
இருட்டில்
நடந்து திரிய
இரவிலும்
சூரிய வெளிச்சம்...
ஆளுக்கு
ஆயிரம்
வருடம்
ஆயுசு....
இதெல்லாம்
புதுசு...
தடுக்கிவிழ...
உட்கார்ந்த
இடத்திலிருந்தே
உலகம் சுற்றும்
கவிஞன் கண்ட
பகல்கனா...!
(கவிதை மழை அ. நவஜோதி அருண்குமார், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர். கவிதைகள் எழுதி வருபவர். இசையில் நாட்டம் கொண்டவர். சமூக அக்கறையுடன் கூடிய படைப்புகளைக் கொடுத்து வருகிறார்)
அம்மா!
யார் கடவுள்?
பசி!
தென்தமிழ் தலையங்கம் : அனைவரிடமும் கருணை காட்டுவோம்...இன்று உலக கருணை தினம்
நண்டு, சிண்டு, நார்த்தங்காய் .. கிணற்றில் விழுந்த ரமா.. நடுங்கிப் போன சுதா!
நான்கு முழம் நீளும் நாக்கு!
Manima Chettinadu Recipes: தின்னத் தின்னத் தெவிட்டாத வாழைப்பூ பந்து!
வெறும் பேச்சிலர் கூடாது!
பப்பாளி .. ஒரு நிமிடக் கதை (57)
{{comments.comment}}