- சிவ.ஆ.மலர்விழி ராஜா
எல்லோரும் எப்படி இருக்கீங்க.. சரி வாங்க .. இன்னிக்கு ஒரு குட்டிக் கதையைப் பார்ப்போமா..
ஒரு வளம் மிகுந்த நாட்டில் ஒரு அரசன் இருந்தான். அவனுக்கு நான்கு மனைவிகள் . நான்காவது மனைவி மேல் அவனுக்கு மிகுந்த அன்பு. மூன்றாவது மனைவியின் மீதும் இரண்டாவது மனைவியின் மீதும் ஏகப்பிரியம். ஆனால் முதல் மனைவியை மட்டும் சரியாக கவனிக்கவில்லை.
போதிய உணவின்றி பலவீனமாய் இருந்தாள். நாட்கள் சென்றன .அரசன் நோய்வாய்ப்பட்டு மரணப்படுக்கையில் இருந்தான் . நான்காவது மனைவியிடம் வாழ்நாள் முழுவதும் உன்னை நேசித்தேன் . நீயும் என்னுடன் வந்துவிடு என்றான். அவள் மறுத்தாள்.
அரசன் அதிர்ந்தான் மூன்றாவது இரண்டாவது மனைவிகளும் உடன்வர மறுத்தார்கள் .
முதல் மனைவி மட்டும் தான் உடன் வருவதாக கூறினாள். அரசன் குற்ற உணர்ச்சியில் மனம் உடைந்து போனான். நாம் எல்லோருமே அந்த மனிதனைப் போலத்தான்.

நான்காவது மனைவி நம் உடல்.. அதற்கு எவ்வளவு அழகு சேர்த்தாலும் நம்முடன் வராது.
மூன்றாவது மனைவி நம் உணர்வுகள்
அவையும் ஓர் எல்லைக்கு பிறகு மாறும்.
இரண்டாவது மனைவி நம் தொடர்புகள்.
கால மாற்றங்களுக்கு உரியவை .
முதல் மனைவி நம் செய்யும் நல்ல காரியங்கள்.. நற்செயல்கள்.. நாம் செய்த புண்ணியங்கள்.. அவை மட்டுமே நம்முடன் கூட வரும்.
சரி அடுத்து ஒரு திருக்குறள் பார்ப்போமா..!
"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு"
திருக்குறளின் முதல் குறள்.. வள்ளுவர் மொழிந்த இந்தக் குறள் சொல்ல வருவது என்ன என்பதை இப்போது பார்க்கலாமா...!
உலக மொழிகள் அனைத்தும் "அ " என்னும் ஒளியை முதல் ஒளியாக கொண்டுள்ளன. அதுபோல் உலகில் உள்ள உயிர்கள் எல்லாம்
கடவுளையே முதல்வனாக கொண்டுள்ளது.
(சீர்காழியைச் சேர்ந்த மலர்விழி ராஜா, கதை, கவிதைகள், கட்டுரைகள், பக்திப் பாடல்கள் எழுதுவதில் வல்லவர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டுத் தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்)
Today Gold Silver Rate:நேற்று குறைந்திருந்த தங்கம் இன்று உயர்வு... அதுவும் சவரனுக்கு ரூ.1,600!
அயோத்தி ராமர் கோவிலில் தர்மதுவ ஜா ரோஹணம்!
அயோத்தியில் கோலாகலம்.. ராமர் கோவில் கோபுரத்தில் கொடியேற்றுகிறார் பிரதமர் மோடி
தென் மாவட்டங்களில் கன மழை.. சார் பணிகள் பாதிப்பு.. மக்கள் அவதி
சிந்திக்க வேண்டிய விஷயம்....!
அறிவுக்கு வேலை கொடு (சிறுகதை)
அன்பிற்கொரு அழுகை... உரிமைக்காய் ஒரு அழுகை..!
அரசனும் நான்கு மனைவியரும்.. முதல் மனைவியால் நெகிழ்ந்த மன்னன்.. குட்டிக் கதை!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் நவம்பர் 25, 2025... இன்று திடீர் அதிர்ஷ்டம் பெற போகும் ராசிகள்
{{comments.comment}}