- ஸ்வர்ணலட்சுமி
ஆடி மாதமும் பழமொழிகளும்: ஆடி மாதத்தில் சுவாரஸ்யமான பழமொழிகள் இம்மாதத்தை சிறப்பிக்கும் வகையிலும் ,அதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைக்கும் சில பழமொழிகளை இக்கட்டுரையில் காண்போம்...
ஆடி மாதத்தில் தொடர்புடைய பழமொழிகள் பலரும் அறிந்ததே, அறியாதவர்களுக்கு இது சுவாரசியமாக இருக்கும் பார்க்கலாம் வாருங்கள் ..
தமிழ் மாதங்களில் ஆடி மாதத்திற்கு தான் அதிக பழமொழிகள் கூறப்படுகிறது .இந்த பழமொழிகள் ஆடி மாதத்தின் சிறப்பையும், பெருமையும் போற்றும் விதமாக அமைந்துள்ளது. பழமொழிகள் என்பதே காலம் காலமாக நம் முன்னோர்கள் சுருக்கமான வரிகளால் பொருள் உணர்த்துவதற்காக, சமுதாய நலனை கருத்தில் கொண்டு அறிவுக்கூர்மையுடன் கூறப்பட்டன. இந்த பழமொழிகள் ஆடி மாதத்தில் நடக்கும் நிகழ்வுகளை கூறுவதுடன், இம்மாதத்தின் பெருமையை அனைவரும் அறிவதற்காகவும், வருங்கால தலைமுறையினர் தெரிந்து கொள்வதற்காக கூறப்பட்டது. பழமொழிகளை எடுத்துக் கூறி வீட்டில் உள்ள பெரியவர்கள் சிறியவர்களுக்கு பொருள் விளக்கி அறிய செய்வர் .
"ஆடிப்பட்டம் தேடி விதை" ஆடி மாதத்தில் அனைத்து விவசாய பணிகளும் தொடங்குவர். ஆடியில் விதை விதைத்தால் தான் பின்வரும் காலத்தில் மழை பொழிந்து பயிர் நன்றாக வளர்ந்து மகசூல் பெருகும். வருங்கால சந்ததியினர் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் "ஆடி பட்டம் தேடி விதை " அல்லது" ஆடி பட்டம் தேடி நடு "என்ற பழமொழி கூறியுள்ளனர்.
"ஆடியில் காத்தடித்தால் ஐப்பசியில் மழை பொழியும்" இந்தப் பழமொழி எதனைக் குறிக்கிறது என்றால் ஆடி மாதத்தில் பலத்த காற்று வீசினால் ஐப்பசி மாதத்தில் நல்ல மழை பொழியும் என்ற கருத்தை உணர்த்துகிறது.
"ஆடி கூழ் அமிர்தம் ஆகும் "ஆடி மாதம் அனைத்து அம்மன் கோவில்களில் அம்மனுக்கு நைவேத்தியமாக கூழ் செய்து அதனை பக்தர்களுக்கு பிரசாதமாக கூழ் ஊற்றுவது வழக்கம். அந்தக் கூழ் அருந்துவதற்கு அமிர்தம் போல் இருக்கும்.
"ஆடிச் செவ்வாய் தேடி குளி அரைத்த மஞ்சள் பூசி குளி" இந்த பழமொழி ஆடி மாத செவ்வாய்க்கிழமையில் புனித நீராடி கிருமி நாசினியாக விளங்கும் அரைத்த மஞ்சளை பூசி குளிப்பதனால் உடலுக்கு நன்மை பயக்கும் என்பதை விளக்குகிறது. செவ்வாய்க்கிழமை மங்களகரமானது என்பதை உணர்த்துகிறது.
"ஆடிக் காற்றில் அம்மியும் பறக்கும் " இந்த பழமொழி ஆடி மாதம் வீசும் பலத்த காற்றை குறிக்கிறது. ஆனால் சரியான பழமொழி யாதெனில் "ஆடி காற்றில் அம்மையும் பறக்கும் " என்பதே .வெயில் காலத்தில் அம்மை போன்ற நோய்கள் ஏற்படும் அது ஆடி மாதத்தில் வீசும் காற்றினால் அம்மை நோய் பறந்து விடும். இதுவே பிற்காலத்தில் ஆடி காற்றில் அம்மியும் பறக்கும் என்று பேச்சு வழக்கில் வந்தது என்று கூறப்படுகிறது.
"ஆடி பால் குடிக்காத மாப்பிள்ளையை தேடிப்பிடி", ஆடித் தேரை தேடி தரிசி ","ஆடிக்கு அழைக்காத மாமியாரை தேடி பிடி ,"ஆடி வரிசை தேடி வரும் ",என இது போன்ற சுவாரசியமான ஆடி மாதத்து பழமொழிகள் பழக்கத்தில் உள்ளன.
மேலும் இது போன்ற சுவாரசியமான தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன் .வரைந்து எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி.
திமுகவின் சுரண்டல் கொள்கையால் மக்கள் வாழ்க்கை நடத்தவே வழியின்றி தடுமாறுகின்றனர்: டாக்டர் அன்புமணி!
வாகன உற்பத்தியின் தலைநகரம் தமிழ்நாடுதான்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
முதல்வருடன் சந்திப்பு.. ஓபிஎஸ் திடீர் அறிக்கைக்கு இது தான் காரணமா.. அடுத்து என்ன செய்வார்?
சிபு சோரன்.. மறக்க முடியாத அரசியல்வாதி.. ஜார்க்கண்ட் அரசியலில் ஒரு சகாப்தத்தின் முடிவு!
தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் விலை... இன்றும் சவரனுக்கு ரூ.40 உயர்வு!
TN Assembly elections 2026: அதிகமான கட்சிகள் கூட்டணிக்கு வருவது திமுக.,விற்கு சாதகமா, பாதகமா?
2வது மாநில மாநாடு.. விஜய் போடும் செம ஸ்கெட்ச்... கோர்ட்டிற்கு செல்லுமா தவெக.. என்ன செய்யும் திமுக?
ஆடிப் பட்டம் தேடி விதை.. ஏன் அப்படி சொன்னாங்க தெரியுமா நம்ம முன்னோர்கள்?
முதல்வரை சந்தித்தது ஏன்.. இதையெல்லாமா அரசியலாக்குவீங்க.. ஓ.பி.எஸ். ஆவேச அறிக்கை
{{comments.comment}}