காவிரிக் கரையெங்கும்.. ஏன்.. அனைத்து ஆறுகளின் கரை முழுக்க இன்று மனிதத் தலைகள்தான்.. மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.. காரணம், இன்று ஆடி 18.. அதாவது ஆடிப் பெருக்கு
ஆடி மாதம் 18ஆம் நாள் "ஆடிப்பெருக்கு" என தமிழ்நாட்டில் கொண்டாடப்படுகிறது. இது நீர் நிலைகளுக்கு நன்றி செலுத்தும் ஒரு முக்கியமான திருநாளாகும், குறிப்பாக காவிரி டெல்டா பகுதிகளில் இது சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
18 என்பது சாதாரணமான எண் இல்லைங்க.. இந்து மதத்தில், 18 என்ற எண் பல முக்கியமான நிகழ்வுகளுடன் தொடர்புடையது.

மகாபாரதப் போர் 18 நாட்கள் நடைபெற்றது.
மகாபாரத காவியம் 18 பர்வங்களைக் (அதாவது அத்தியாயங்கள்) கொண்டது.
வேத வியாசர் தொகுத்த மகாபுராணங்கள் 18
இது மட்டுமா.. 18 உபபுராணங்கள் மற்றும் 18 தர்ம சாஸ்திரங்களும் (ஸ்மிருதிகள்) உள்ளன.
சித்தர்கள் எண்ணிக்கை 18
சங்கம் மருவிய காலத்தில் இயற்றப்பட்ட நூல்களின் தொகுப்பு 18.. அதுதான் பதினென்கீழ் கணக்கு
இந்து மத நம்பிக்கையின்படி, மனித உடல் 5 கர்மேந்திரியங்கள், 5 ஞானேந்திரியங்கள், மனம், புத்தி, சித்தம், அகங்காரம், மற்றும் சத்வ, ரஜஸ், தாமஸ் ஆகிய மூன்று குணங்கள், ஒரு ஜீவன் என மொத்தம் 18 விஷயங்களை உள்ளடக்கியது.
எண் கணிதத்தில் 18 (1+8 = 9) என்பது 9-ன் ஆதிக்கத்திற்குரிய எண்ணாகக் கருதப்படுகிறது. 9 என்பது செவ்வாய் கிரகத்துடன் தொடர்புடையது. 18-ஆம் தேதி பிறந்தவர்கள் அல்லது 18 என்ற எண்ணின் ஆதிக்கத்தில் உள்ளவர்கள் பொதுவாக:
மிகுந்த தைரியமும், சக்தியும் கொண்டவர்களாக இருப்பார்கள். சவால்களை எதிர்கொள்ள தயங்க மாட்டார்கள். மற்றவர்களை அடக்கி ஆளும் குணம் கொண்டவர்கள். தலைமைப் பண்புகள் இயல்பாகவே இருக்கும். நல்ல பேச்சுத் திறமை உண்டு.
ஹீப்ரு கலாச்சாரத்தில், 18 என்ற எண் "Chai" (חי) என்ற வார்த்தையுடன் தொடர்புடையது, இதன் பொருள் "உயிர்" அல்லது "வாழ்க்கை" என்பதாகும்.
யூதர்கள் தங்கள் சமுதாயத்திற்கு அளிக்கும் நன்கொடைகளை 18 இன் மடங்குகளில் வழங்குவது வழக்கம், இது "வாழ்க்கைக்கு பரிசளித்தல்" என்பதன் அடையாளமாக கருதப்படுகிறது.
இப்படி 18 என்ற எண்ணின் முக்கியத்துவத்தை, மகத்துவத்தை சொல்லிக் கொண்டே போகலாம்
இப்படி 18 என்ற எண் இந்திய கலாச்சாரத்திலும், ஆன்மீகத்திலும், எண் கணிதத்திலும் ஆழமான மற்றும் பரந்த முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது
ஆடி மாதத்தின் சிறந்த தினம் இன்று.. நிலத்தையும், மக்களின் உயிரையும் வளமாக்கும்.. தண்ணீர்த் தாய்க்கு நன்றி சொல்வோம்.. அனைவருக்கும் இனிய ஆடிப் பெருக்கு தின நல் வாழ்த்துகள்
மன அமைதியே வெற்றியின் வழி..!
Namakkal Anjaneyar temple: ஹனுமன் ஜெயந்தி.. நாமக்கல்லில் களை கட்டிய ஆஞ்சநேயர் கோவில்
தமிழக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு...மாவட்ட வாரியாக நீக்கப்பட்டவர்கள் விபரம்
தோளோடு தோள் சேர்ந்து நடப்போம்.. Balancing Relationship Is An Art
100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை முழுமையாக ஒழிக்கவே பெயர் மாற்றம் - திருமாவளவன்
தெய்வீக ஒளியின் கீழ்..Purpose, the Soul’s True Peace
அடுத்த 7 நாட்களுக்கு மழை இருக்கா? இல்லையா?... இதோ வானிலை கொடுத்த அப்டேட்!
செவிலியர்களுக்கு காலி இடங்கள் இருந்தால் மட்டுமே பணி வழங்க முடியும்: அமைச்சர் மா. சுப்பிரமணியன்
பிட்புல், ராட்வைலர் நாய்களை வளர்க்கக் கூடாது... மீறினால் 1 லட்சம் அபராதம்: மேயர் பிரியா!
{{comments.comment}}