சென்னை: நடிகர் அர்ஜூன் தனது மகள் திருமண நிச்சயதார்த்த போட்டோக்களை வெளியிட்டு, "எங்களது மகனை வரவேற்கிறோம்" என்று உற்சாகமாக தெரிவித்துள்ளார்.
நடிகர் தம்பி ராமையாவின் மகன் நடிகர் உமாபதி. இவருக்கும், நடிகர் அர்ஜூனின் மகள் நடிகை ஐஸ்வர்யாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இந்தக் காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவிக்கவே, சூப்பராக நிச்சயதார்த்தத்தை முடித்து விட்டனர். விரைவில் திருமணம் பிரமாண்டமான முறையில் நடைபெறவுள்ளது.

நிச்சயதார்த்த விழாவானது சிம்பிளாக கோவிலில் வைத்து நடத்தப்பட்டுள்ளது. இதில் இரு வீட்டாரும், அவர்களது நெருங்கிய உறவினர்களும் மட்டுமே கலந்து கொண்டனர். திருமணத்தை விமரிசையாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
நடிகர் அர்ஜூனுக்கு தென்னிந்தியா முழுவதும் திரைத் துறையினர் நெருங்கியவர்களாக உள்ளதாலும், தம்பி ராமையாவும் மிகப் பிரபலமான நடிகராக இருப்பதாலும் இந்தத் திருமண விழா தென்னிந்தியத் திரையுலகின் சங்கம விழாவாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் மகள் திருமண நிச்சயதார்த்த புகைப்படங்களை அர்ஜூன் பகிர்ந்து பெருமிதத்துடன் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் போட்டுள்ள டிவீட்டில், கடவுள் ஹனுமானின் கருணையால், அதிர்ஷ்டமும், அன்பும் எங்களுக்கு ஆசிர்வதிக்கப்பட்டுள்ளது. எங்களது வாழ்க்கையின் மிக மகிழ்ச்சியான தினம். வாருங்கள் எங்கள் மகனே என்று பாசத்துடன் தனது மாப்பிள்ளை உமாபதியை மகனே என்று விளித்து மகிழ்ந்துள்ளார் அர்ஜூன்.
நாமும் வாழ்த்துவோம் .. உமாபதி - ஐஸ்வர்யா அர்ஜூன் இணையரை!
தேவகோட்டை பள்ளியில்.. கந்தர் சஷ்டி விழாவில் கலை நிகழ்ச்சிகளால் கலக்கிய மாணவர்கள்!
டெல்லியில் மீண்டும் தோல்வியடைந்த செயற்கை மழை முயற்சிகள்.. ஈரப்பதம் போதவில்லை!
பணிச்சுவை!
ரபேல் விமானத்தில் பறந்தார் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு.. கலாம், பிரதீபா பாட்டீல் வழியில் சாதனை
வைரலானது.. ஜப்பானின் முதல் பெண் பிரதமரின் கைப்பை.. உள்ளூர் நிறுவனத்திற்கு கிராக்கி!
பைந்தமிழே பயிற்று மொழி...!
Cyclone Montha effect: திருவள்ளூருக்கு ஆரஞ்சு... சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்!
2026 தேர்தலிலும் திமுக.,வுக்கு தான் வெற்றி...முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை
வாக்குரிமைப் பறிப்பைத் தடுப்போம்... வாக்குத் திருட்டை முறியடிப்போம்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
{{comments.comment}}