Fahad Fazil ADHD: பகத் பாசிலுக்கா இந்த பாதிப்பு.. பெரும் சோகத்தில் ரசிகர்கள்!

May 28, 2024,05:19 PM IST
சென்னை: நடிகர் பகத் பாசிலுக்கு ஏடிஎச்டி என்ற மூளை நரம்பு பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

மலையாளத் திரை உலகில் பிரபலமான இயக்குனர் பாசிலின் மகன்தான் பகத் பாசில். இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து வருகிறார். கடந்த வருடம் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் 2 படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் பிரபலமானவர். இப்படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை தம் பக்கம் கொண்டு வந்தவர். 

இதனைத் தொடர்ந்து மாமன்னன் படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து மாஸ் காட்டியவர். வடிவேலுவுக்கு இணையாக கொண்டாடப்பட்டவர். இப்படத்தின் மூலம் இவருடைய நடிப்பு பிரபலமாக பேசப்பட்டது. இப்படத்தில் தனது வித்தியாசமான நடிப்பின்  மூலம் தமிழில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை குவித்துள்ளார். 



தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் வேட்டையன் படத்திலும், காமெடி நடிகர் வடிவேல் நடிப்பில் உருவாகும் மாரீசன் படத்திலும் பகத் பாசில் நடித்து வருகிறார். இது தவிர பான் இந்தியா திரைப்படமாக வெளியான புஷ்பா திரைப்படம்  விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிக பெரிய வரவேற்பை பெற்றது. இப்படத்தின்  இரண்டாவது பாகம் தற்போது உருவாகி வருகிறது. இந்த இரண்டாவது பாகத்திலும் நெகட்டிவ் ரோலில் நடித்து வருகிறார் பகத் பாசில். இதன் முதல் பாகத்திலேயே கலக்கியிருந்தார் பகத் பாசில்.

இந்த நிலையில்  நடிகர் பகத் பாசில் சமீபத்தில் கேரளாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது அங்கு வந்த மருத்துவரிடம் ADHD என்று சொல்லக்கூடிய மூளை நரம்பியல் நோயை குணப்படுத்த முடியுமா என கேள்வி கேட்டுள்ளார். சிறுவயதிதிலேயே கண்டறிந்தால் குணப்படுத்த முடியும் என டாக்டர் கூறியுள்ளார். அதற்கு பகத்பாசில் 41 வயதில் கண்டறிந்தால் குணப்படுத்த முடியுமா என கேட்டுள்ளார். இதன் மூலம் பகத் பாசிலுக்கு ADHD என சொல்லக்கூடிய மூளை பாதிப்பு நோய் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.

ADHD என்றால் என்ன?

Attention Deficit Hyperactivity Disorder என்பதுதான் ADHD என்ற மூளை நரம்பியில் நோயின் பெயர் விரிவு ஆகும். இந்த நோய் பாதிப்பு வந்தவர்களுக்கு கவனத்தில் பிரச்சினை வரும். சரியாக எதையும் கவனிக்க முடியாது, மனதில் வைத்துக் கொள்ள முடியாது. கவனமின்மை அதிகமாக இருக்கும். அதேசமயம், ஹைப்பராக இருப்பார்கள். எதையும் வேகமாக செய்து முடிக்க வேண்டும் என்று வேகம் காட்டுவார்கள். ஆனால் கவனக் கோளாறு இருப்பதால் அதை அவர்களால் முடிக்க முடியாது. இதனால் குழப்பம் ஏற்படும், தவறுகள் ஏற்படும், கோபம் அதிகரிக்கும். இப்படி பலவிதமான பிரச்சினைகளை இந்த நோய் பாதிப்பு ஏற்படுத்தும்.

இதில் இரண்டு வகையான பாதிப்புகள் உருவாகும். முதல் பாதிப்பில் வெறும் கவனக்குறைபாடு மட்டுமே இருக்கும். மற்றபடி நார்மலாக இருப்பார்கள், அவர்கள் ஹைப்பராக இருக்க மாட்டார்கள். இதை ஏடிடி என்று சொல்வார்கள். இது பலருக்கு வெளியில் தெரியாமலேயே போய் விடும். அதாவது சாதாரண கவனமின்மைதானே என்று அவர்கள் அதை எடுத்துக் கொள்வதால் தங்களுக்கு வந்திருப்பது ஏடிடி என்பதே அவர்களுக்குத் தெரியாது. 2வது வகை பாதிப்பில் இரண்டு விதமான பிரச்சினையும் சேர்ந்து வரும்.

ஏடிஎச்டி பாதிப்பு என்பது பெரும்பாலும் ஆண்களுக்குத்தான் அதிகம் ஏற்படும். பெண்களுக்கு இது குறைவுதான் என்பது குறிப்பிடத்தக்கு.

சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்