கள்ளக்குறிச்சி:சேலத்தில் இருந்து சென்னைக்கு திரும்பிய போது இருசக்கர வாகனம் குறுக்கே வந்ததால் சாலையின் தடுப்புச் சுவர் மீது மோதி நடிகர் ஜீவாவின் கார் விபத்திற்கு உள்ளானது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர். இவர் சேலத்திலிருந்து சென்னைக்கு குடும்பத்தினருடன் காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது கார் சின்னசேலம் அடுத்து அமோகரம் பகுதியில் வந்து கொண்டிருந்தது. திடீரென எதிர்பாராத விதமாக டூவீலர் ஒன்று காரின் குறுக்கே வந்தது.

இதைப் பார்த்த ஜீவாவின் கார் நிலை தடுமாறி, சாலையின் தடுப்பு மீது மோதி விபத்திற்கு உள்ளானது. உடனே சாலையில் அருகே இருந்தவர்கள் ஓடிவந்து காரின் அருகே திரண்டனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அப்போது காரில் இருந்து இறங்கிய போது தான் நடிகர் ஜீவாவின் கார் விபத்திற்கு உள்ளானது தெரிய வந்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
இதில் ஜீவா மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். மேலும் காரின் முன் பகுதியில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஜீவா சேலத்தில் இருந்து வேறொரு காரில் சென்னை புறப்பட்டார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
ஜெம் கிரானைட்ஸ் வீரமணி வழக்கில் லஞ்சம் வாங்கிய அதிகாரிகள் யார்? விசாரிக்க சிறப்பு குழு அமைப்பு!
"நிர்வாக அறிவு இருக்கிறதா?" – தவெக அரசை கடுமையாக விமர்சித்து மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!
குற்றவாளிகள் ஒருவரையும் விடக்கூடாது: ஜெம் கிரானைட்ஸ் வீரமணி விவகாரத்தில் முதல்வர் அதிரடி உத்தரவு
ஜெம் கிரானைட் வீரமணி விவகாரம்: தவெக-திமுக இடையே முற்றும் மோதல்
ஆளுக்கு 8 ஓட்டு.. 9 மாத மழலை எடுத்துக் கொடுத்த சீட்டு.. கலகலப்பாக முடிந்த பள்ளித் தலைவர் தேர்தல்!
நடிகை அம்பிகா மீது சகோதரி ராதா பரபரப்பு புகார்: ரூ.46 கோடி மோசடி செய்ததாக போலீசில் புகார்
வங்கக்கடலில் தீவிரமடையும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை!
ஏகாந்தம்.. அழகிய முழு நிலவொளியில் ஆனந்த ராகம் பாடி!
Short Story: காணாமல் போன கண்ணன்
{{comments.comment}}