கவினுக்கு கல்யாணமாய்ருச்சு.. பொண்ணு யாருன்னு தெரியுமா?

Aug 21, 2023,09:56 AM IST
சென்னை: நட்புன்னா என்ன தெரியுமா படத்தில் ஹீரோவாக அறிமுகமாகி நல்ல நல்ல  படங்களாகத் தேர்வு செய்து நடித்து வரும் நடிகர் கவின் திருமணம் செய்துள்ளார். 

நீண்ட காலமாக காதலித்து வந்த காதலி மோனிகாவைத்தான் கவின் திருமணம் செய்துள்ளார். கல்யாண போட்டோக்களையும் அவர் பகிர்ந்துள்ளார். 



பிக் பாஸ் மூலம் பிரபலமானவர் கவின். அப்போது அவருக்கும், இன்னொரு பிக் பாஸ் ஹவுஸ்மேட்டான லாஸ்லியாவுக்கும் இடையே நெருங்கிய நட்பு ஏற்பட்டதாகவும், அது காதலாக மாறியதாகவும்கூட பரபரப்பு கிளம்பியது.

இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டை விட்டு வந்த பிறகு இருவரும் ஆளுக்கு ஒரு பக்கமாக போய் விட்டனர். தற்போது கவின் திருமணம் நடந்து முடிந்துள்ளது.  மிகவும் சிம்பிளாக, பெரிய அளவில் கூட்டம் சேர்க்காமல் திருமணத்தை நடத்தி முடித்துள்ளனர். இந்தத் திருமணத்தில் இரு வீட்டார், மிகவும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். திரையுலகைச் சேர்ந்த மிகச் சில விஐபிக்களும் கூட இதில் பங்கேற்றனராம். 



பிக் பாஸுக்குப் பிறகு கவின் நடிகராக அறிமுகமானார். அவர் ஹீரோவாக நடித்த முதல் படம் நட்புன்னா என்னா தெரியுமா.. ரம்யா நம்பீசனுடன் இணைந்து நடித்த இந்தப் படம்அவருக்கு நல்ல பெயரைத் தேடித் தந்தது.  அதைத் தொடர்ந்து தாதா படம் அவருக்கு மிகப் பெரிய பெயரைப் பெற்றுக் கொடுத்தது.  தற்போது அனிருத் இசையமைப்பில் சதீஷ் இயக்கும் புதிய படத்தில் கவின் ஹீரோவாக நடித்து வருகிறார்.

திருமணம் செய்துள்ள கவினுக்கு நண்பர்கள், திரையுலகினர், ரசிகர்களிடமிருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

சமீபத்திய செய்திகள்

news

தவெகவை இந்தியா முழுவதும் அறிய வேண்டும் என்பதால் இந்தியில் பேசுகிறேன்.. கீர்த்தனா எம்எல்ஏ

news

தவெக குழப்பத்தால்.. திமுக, அதிமுகவை வைத்து கொடி கட்டிப் பறக்கும் வதந்திகள்!

news

ஜல்லிகட்டுப் போராட்டம் போல.. போராட தவெகவினர் திட்டமா?.. போலீஸ் கண்காணிப்பு அதிகரிப்பு

news

தவெக ஆட்சியமைக்கட்டும்.. தொந்தரவு செய்ய மாட்டோம்... திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

news

இளம் அரசு ஊழியர்களை ஒட்டுமொத்தமாக வசீகரித்த தவெக.. திமுகவின் பின்னடைவு!

news

சட்டசபையை வென்ற கையோடு.. நாடாளுமன்றத்திற்குள்ளும் நுழைய தவெகவுக்கு ஒரு அரிய வாய்ப்பு!

news

விஜய்யின் எழுச்சி.. தப்புக் கணக்குப் போட்டு விட்டார்களா திராவிடக் கட்சிகள்?

news

ஆர் பி சௌத்ரி .. அவர் ஒரு அபூர்வம்!

news

The Clockmaker’s Apprentice.. ஒரு கடிகாரத்தை வைத்து பின்னப்பட்ட கதை!

அதிகம் பார்க்கும் செய்திகள்