மும்பை: பிரபல நடிகர் மாதவன், மும்பையின் பாந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸில் (BKC) அமைந்துள்ள தனது ரூ. 17.5 கோடி மதிப்பிலான சொகுசு வீட்டை வாடகைக்கு விட்டுள்ளார். இந்த இரண்டு வருட குத்தகை ஒப்பந்தத்தின் மூலம் அவருக்கு 2 வருடத்திற்கு ரூ. 1.6 கோடி வருவாய் கிடைக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாதவன் மற்றும் அவரது மனைவி சரிதாவுக்குச் சொந்தமான இந்த 4,182 சதுர அடி கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு, பிரிட்டிஷ் பன்னாட்டு எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனமான BP Exploration (Alpha) Limited நிறுவனத்திற்கு மாதம் ரூ. 6.5 லட்சத்திற்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளது.
ஜூன் 2025 முதல் வாரத்தில் தொடங்கி, 24 மாதங்கள் (இரண்டு ஆண்டுகள்) குத்தகை காலம் கொண்டது இந்த ஒப்பந்தம். இதில் 16 மாத லாக்-இன் காலம் உள்ளது. முதல் வருடத்தில் மாத வாடகை ரூ. 6.5 லட்சமாக இருக்கும் நிலையில், இரண்டாம் ஆண்டில் இது 5% அதிகரித்து ரூ. 6.83 லட்சமாக உயரும். இந்த இரண்டு ஆண்டுகளில் மொத்த வாடகை வருவாய் சுமார் ரூ. 1.6 கோடியாக இருக்கும்.

குத்தகை ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, மாதவனுக்கு ரூ. 39 லட்சம் பாதுகாப்பு வைப்புத் தொகையாகக் கிடைத்துள்ளது. Signia Pearl என்ற குடியிருப்பு வளாகத்தில் அமைந்துள்ள இந்த வீட்டை, மாதவன் ஜூலை 2024 இல் ரூ. 17.5 கோடிக்கு வாங்கியிருந்தார்.
மும்பையின் முக்கியமான வணிக மையங்களில் ஒன்றான BKC, பல நிதி நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் தூதரகங்களை கொண்ட ஒரு பிரதான பகுதியாகும். அதன் சிறந்த இணைப்பு மற்றும் தொடர்ச்சியான தேவை காரணமாக இங்குள்ள சொத்து மதிப்புகள் எப்போதும் அதிகமாகவே உள்ளன.
ஏகப்பட்ட பிரச்சினை: சுறுசுறுப்பு காட்டும் தமிழக அரசியல் கட்சிகள்.. அடுத்தடுத்து போராட்டம் அறிவிப்பு
ஆண் மகனை அவனாகவே வாழ விடுங்கள்!
நாகர்கோவில் சிறையில் கைதி கொலை: CBCID விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவு!
முதல்வரை மிரட்டிய வழக்கு: திமுக எம்எல்ஏ மார்கண்டேயனின் ஜாமீன் மனு தள்ளுபடி!
நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: விரிவான விவாதம் நடத்த தயார் - மத்திய அரசு அறிவிப்பு
நீட் தேர்வு போராட்டம்.. இதைத்தான் தொடர்ந்து சொல்லி வருகிறது திமுக.. மு.க.ஸ்டாலின்
ராகுல் காந்தி கைது வன்மையாக கண்டிக்கத்தக்கது.. முதல்வர் விஜய் கண்டனம்
போதையில் கார் ஓட்டிய வழக்கு: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னருக்கு சிறை தண்டனையா?
முடிவுக்கு வந்தது பாமக விவகாரம்...அன்புமணிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற ராமதாஸ்
{{comments.comment}}