ஹைதராபாத்: பிரபல நடிகர் நாக சைதன்யா, சோபிதா துலிபாலா ஆகிய இருவரும் காதலித்து வந்த நிலையில், இன்று திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இது நாக சைதன்யாவுக்கு மறுமணம் ஆகும்.
நாகார்ஜூனா - அமலா தம்பதியின் மூத்த மகன் நாக சைதன்யா. நாக சைதன்யா தெலுங்கு சினிமா உலகில் டாப் நடிகராக திகழ்ந்து வருபவர். ஏ மாயா சேசாவே, மனம், லவ் ஸ்டோரி, மஜிலி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் வெங்கட்பிரபு இயக்கத்தில் கஸ்டடி என்ற படத்தில் நடித்தார். தற்போது சாய் பல்லவியுடன் தண்டேல் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் ஒரு மீனவனின் உண்மை கதை என்று செல்லப்படுகிறது.

இவருடன் நடிகை சமந்தா விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக் ஏ மாயா சேசாவே, மனம், மஜிலி ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்த படங்களில் நடித்தபோதுதான் நாக சைதன்யா- சமந்தாவிற்கு காதல் ஏற்பட்ட நிலையில், இருவீட்டாரின் சம்மதத்துடன் கடந்த 2017ம் ஆண்டு பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர். அதன்பின்னர் பிரபல ஜோடியாக வலம் வந்தனர். ஆனால் குறுகிய காலத்திலேயே இருவருக்குள்ளும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2021ம் ஆண்டு பிரிவதாக அறிவித்து அவரவர் பாதையில் செல்ல ஆரம்பித்தனர்.
இந்த நிலையில், நடிகர் நாக சைதனயா நடிகை சோபிதாவுடன் நெருக்கமாக பழகி வருவதாகவும், இருவரும் அவுட்டிங், டேட்டிங் செய்து வருவதாகவும் கூறப்பட்டன. ஆனால் இது உண்மை இல்லை என்று அவர்களின் தரப்பில் இருந்து கூறப்பட்ட நிலையில் இன்று இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்து விட்டது. இதை நாக சைதன்யாவின் தந்தையான நாகார்ஜூனாவே அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் போட்டுள்ள எக்ஸ் பதிவில், என் மகன் நாக சைதன்யாவுக்கும் சோபிதா துலிபாலாவுக்கும் இன்று காலை நிச்சயதார்த்தம் நடந்ததை அறிவிப்பதில் மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார்.
நடிகை சோபிதா, மணிரத்தினம் இயக்கி பொன்னியின் செல்வன் படத்தில் முக்கியப் பாத்திரத்தில் வந்து போனவர் என்பது நினைவிருக்கலாம்.
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}