ரசிகரிடம்.. மன்னிப்பு கேட்ட.. தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் நாகார்ஜுனா.. ஏன் என்னாச்சு?

Jun 24, 2024,11:59 AM IST

ஹைதராபாத்:  தெலுங்கு உச்ச நடிகர் நாகார்ஜூனா தனது ரசிகர் ஒருவரை தள்ளி விட்டதாக வீடியோ வெளியாகி வைரலாகி, பல்வேறு தரப்பினரிடையே கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில், அந்த ரசிகரிடம் நாகார்ஜூனா மன்னிப்பு கேட்டுள்ளார்.


ஹைதராபாத் விமான நிலையத்தில் நடிகர் நாகார்ஜுனா நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது ரசிகர் ஒருவர் நாகார்ஜுனாவை சந்திப்பதற்கு முயற்சி செய்து உள்ளார். ஆனால் நாகார்ஜுனா இதனை கண்டு கொள்ளவில்லை. இதனால் அங்கிருந்த பாதுகாவலர் ஒருவர் நாகார்ஜுனாவை பார்க்க வந்த துடித்த அந்த வயதான ரசிகரை தள்ளிவிட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருவதுடன் பலரும்  கடுமையான விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர்.


இந்த வீடியோ தற்போது நாகார்ஜுனா பார்வையில் வந்துள்ள நிலையில் அந்த ரசிகரிடம் மன்னிப்பு கேட்டு தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இப்படி நடந்திருக்கக் கூடாது. எதிர்காலத்தில் இது போன்று நடக்காமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பேன் என ட்விட் போட்டுள்ளார்.


நடிகர் நாகார்ஜுனா: 




தெலுங்கு உச்ச நடிகரான நாகார்ஜூனா, தெலுங்கு மட்டுமல்லாமல் தென்னிந்திய முழுவதும் பல்வேறு ரசிகர்களின் அன்பை பெற்றவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, போன்ற மொழிகளில் நடித்து பிரபலமானதன் மூலம் இவருக்கு ரசிகர் பட்டாளம் ஏராளம்.


கீதாஞ்சலி மற்றும் நின்னே பெல்லதாதா போன்ற படங்களில்  தனது சிறப்பு நடிப்பிற்காக பல்வேறு தரப்பினரிடையே கவனத்தை ஈர்த்த நிலையில் இப்படங்களுக்காக தேசிய விருதுகளை பெற்றவர்.


நாகர்ஜுனாவின் திருமண வாழ்க்கை: 


1984 ஆம் ஆண்டு பிப்ரவரி 18ஆம் தேதி லட்சுமி ரமா நாயுடுவை  மணந்தார். இவர் தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் டி. ராமா நாயுடுவின் மகளும் மற்றும் தெலுங்கு நடிகர் வெங்கடேசின் சகோதரியும் ஆவார். நாகார்ஜூனா மற்றும் லட்சுமி தம்பதியினருக்கு பிறந்த மகன் நாக சைத்தன்யா. இவர் ஜோஷ் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர்.


இதனைத் தொடர்ந்து 1992 ஆம் ஆண்டு தமிழ் மற்றும் தெலுங்கு முன்னணி நடிகையான அமலா பாலை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு அகில் என்ற ஒரு மகன் இருக்கிறார். இவர் அகில் சிசிந்திரி என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு

news

நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!

news

சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?

news

எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!

news

TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?

news

லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!

news

Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி

news

எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!

news

முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!

அதிகம் பார்க்கும் செய்திகள்