சென்னை: விஜய் டிவியின் மூலமாக பிரபலமான நடிகர் புகழ் கடந்த 251 நாட்களாக தினசரி 50 நபர்களுக்கு உணவு வழங்கி வருகிறார். வருடத்தில் 365 நாட்களும் தனது அலுவலகத்தில் உணவு வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இவரின் இந்த செயலுக்கு பலரும் பாராட்டை தெரிவித்து வருகின்றனர்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மனங்களை கவர்ந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பரிச்சயமானவர் நடிகர் புகழ். இதனைத் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு தனது பங்கினை சிறப்பாக செய்து வந்தார். இதன் மூலம் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உருவானது. இவரின் விடாமுயற்சியால் வெள்ளித் திரையிலும் சப்போர்ட்டிங் கேரக்டர்களில் நடிக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளார்.
மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்த் தமிழ் சினிமாவில் பல புரட்சிகளை செய்தவர். குறிப்பாக தான் உண்ணும் உணவையே அனைவரும் சாப்பிட வேண்டும். அனைவரும் சரிசமம் என்பதை வலியுறுத்தி, தான் சம்பாதித்த பணத்தில் ஒரு பங்கை உணவில்லாத ஏழை எளிய மக்களுக்கு வழங்கி தன்னிகரற்ற மனிதனாக உயர்ந்தவர். தான் எவ்வளவு உயரத்திற்கு சென்றாலும் யாரும் உணவு இல்லாமல் இருக்கக்கூடாது என்பதை செயல்படுத்தி வந்ததன் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். அவரது வீட்டுக்கோ அலுவலகத்துக்கோ யார் போனாலும் சாப்பிடாமல் திரும்பி வர முடியாது. அப்படி வயிறுகளை குளிர்வித்து மகிழ்ந்தவர் விஜயகாந்த். கடந்த ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். இவர் இறப்பு செய்தி கேட்டு அனைவரும் அதிர்ந்தனர். இவரின் இறுதிச் சடங்கிற்கு தமிழகமே ஒன்று திரண்டு அஞ்சலி செலுத்தியது.

இந்த சூழ்நிலையில் நடிகர் புகழ் பசி என்று யார் வந்தாலும் அவர்களுக்கு என்னுடைய அலுவலகத்தில் உணவு வழங்கப்படும் என்று மறைந்த நடிகர் விஜயகாந்த் நினைவிடத்தில் உறுதி ஏற்றிருந்தார். அதனை நிறைவேற்றும் விதமாக தினமும் தன்னுடைய அலுவலகத்தில் 50 நபர்களுக்கு உணவு வழங்கி வருகிறார். கடந்த 250 நாட்களாக தொடந்து உணவு வழங்கி வரும் நிலையில் 251 வது நாளை அது எட்டியுள்ளது.
ஆண்டின் 365 நாட்களும் தனது அலுவலகத்தில் தான் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தினமும் 50 நபர்களுக்கு கண்டிப்பாக உணவு வழங்கப்படும். அது ஞாயிற்றுக்கிழமை, அரசு விடுமுறை, பண்டிகை நாட்களாக இருந்தாலும் சரி எல்லா நாட்களிலும் உணவு வழங்கப்படும் அதில் எந்த தடையும் இருக்காது அதற்கான ஏற்பாடுகளை தான் செய்துள்ளேன்.வரும் காலங்களில் இந்த உதவி மேலும் பலருக்கு சென்றடையும் வண்ணம் விரிவுபடுத்த தன்னுடைய வெற்றிக்கு மக்களின் ஆதரவை என்றும் நாடியிருப்பதாக நடிகர் புகழ் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Santhi Sinnathambi Poem: விடுமுறைக்காகக் காத்திருந்தோம்.. காத்திருந்தோம்!
பட்ஜெட்டில் ஒன்றுமே இல்லை...ஸ்டிக்கர் ஒட்டும் அரசு : எடப்பாடி பழனிச்சாமி கடும் விமர்சனம்
தமிழக பட்ஜெ ட் 2026 : தவெக அரசால் பெயர் மாற்றப்பட்ட 2 திட்டங்கள்
ஆடியிலே அலைமோதி ஆர்ப்பரிக்கும் காவிரியில்!
சேலம் கோட்டை ஸ்ரீ பெரிய மாரியம்மன் கோவில் ஆடித் திருவிழா
திருநாவுக்கரசரை அசைத்துக் கூட பார்க்க முடியாத கொடும் விஷம்
விவாகரத்தில் விம்மிய தாய் உள்ளம்
முதல்வர் விஜயின் முதல் பட்ஜெட்.. சட்டசபையில் தாக்கல் செய்தார் நிதியமைச்சர் மரிய வில்சன்
ஆணவம், அழிவுக்கு வழிவகுக்கும்; தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும்.. மு.க.ஸ்டாலின்
{{comments.comment}}