சென்னை: நடிகர் விஜய் அரசியலுக்கு வந்ததில் மிக்க மகிழ்ச்சி. மக்கள் விஜய் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். அவர் வெற்றி பெற வாழ்த்துக்கள் என நடிகர் ராகவா லாரன்ஸ் பேசியுள்ளார்.
நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் சேவை கடவுள் என்ற அறக்கட்டளையை கடந்த மே ஒன்றாம் தேதி தொடங்கியுள்ளார் .
இந்த அறக்கட்டளையின் மூலமாக ஏழை விவசாயிகள் பயனடையும் வகையில் டிராக்டர் வாங்க முடிவெடுத்துள்ளார். அதன்படி தமிழ்நாடு முழுவதும் உள்ள 10 ஏழை விவசாயிகளுக்கு பல்வேறு மாவட்டங்களில் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் நான்காவது டிராக்டர் மயிலாடுதுறை மாவட்டம் தில்லையாடி கிராமத்தில் சதீஷ் என்ற விவசாயிக்கு இன்று வழங்கப்பட்டது.

முன்னதாக ராகவா லாரன்ஸ்க்கு நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் கிராம மக்கள் உற்சாக வரவேற்பளித்தனர். அவரோடு ஊர் மக்கள் அனைவரும் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.
இந்த டிராக்டர் கிராமம் முழுவதும் உள்ள அனைத்து ஏழை விவசாயிகளும் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம். தமிழ்நாடு முழுவதும் முதற்கட்டமாக 10 டிராக்டர்கள் வழங்க உள்ளதாகவும், விரைவில் விதவைப் பெண்கள் 500 பேருக்கு தையல் இயந்திரங்கள் வழங்க உள்ளதாகவும் தெரிவித்தார். பின்னர் இது குறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது,
விவசாயிகள் பல்வேறு இடங்களில் கடன் சுமையால் தற்கொலை செய்வது கொள்வதாக வரும் செய்திகள் தனக்கு மிகுந்த வேதனையை அளிக்கிறது.இதனை போக்கும் வகையில் விவசாயிகளுக்கான உபகரணங்கள் வழங்க முடிவு செய்து மாநிலம் முழுவதும் வழங்கி வருகிறேன்.இங்கு வழங்கி உள்ள டிராக்டரை அந்த பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் அனைவரும் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம் எனக் தெரிவித்தார்.
நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு,
நடிகர் விஜய் எதை செய்தாலும் அதை சரியாக செய்வார். அவர் அரசியலுக்கு வந்தது சந்தோஷம்.மக்கள் நடிகர் விஜயிடம் அதிகம் நம்பிக்கை வைத்துள்ளனர். விஜயும் மக்களிடம் நம்பிக்கை வைத்து கட்சியை ஆரம்பித்திருக்கிறார். நண்பர் விஜய்க்கு எனது வாழ்த்துக்கள் என்று தெரிவித்தார். மேலும் ஏழை விவசாயிகளுக்கு டிராக்டர் வழங்கியதற்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்துக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு... அதிகாலையில் பனிமூட்டமும் இருக்குமாம் - IMD
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியுடன் நயினார் நாகேந்திரன் திடீர் சந்திப்பு.. எதுக்காக?
விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்றுக் கொள்பவர்களுடன் கூட்டணி: தவெக கூட்டத்தில் தீர்மானம்
சூடுபிடிக்கும் சட்டசபை தேர்தல் பணிகள்.. டிசம்பர் 15 முதல் அஇஅதிமுக விருப்பமனு!
சுப்ரியா சாகு அவர்களுக்கு ஐ.நா. விருது.. தமிழ்நாடு பெருமை கொள்கிறது.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
பாரதி இன்று இருந்திருந்தால், பிரதமருக்கு வாழ்த்துப் பாடல் பாடியிருப்பார் - தமிழிசை சௌந்தரராஜன்
சாதிவாரி கணக்கெடுப்பு போராட்டத்துக்கு வாங்க... பாமக நிர்வாகிகள் நேரில் சென்று தவெகவிற்கு அழைப்பு
98 அடி உயரத்துக்கு சுனாமி அலைகள் எழும்.. ஜப்பான் அரசு வெளியிட்ட எச்சரிக்கை.. பின்னணி என்ன?
தொடர் உயர்வில் தங்கம் விலை... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்... இன்றைய விலை நிலவரம் இதோ
{{comments.comment}}