சென்னை: இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் விதமாக முதல் முதலாக சிம்பொனி இசையை இன்று அரங்கேற்றவுள்ள இசைஞானி இளையராஜாவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பண்ணைபுரத்தில் ஹார்மோனியம் வாசித்த கைகள் இன்று லண்டனில் சிம்போனி படைக்கிறது என தனது எக்ஸ் தளத்தில் வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளார்.
தேனி மாவட்டம் பண்ணையபுரத்தில் இருந்து தனது முதல் இசைப் பயணத்தை துவங்கினார் இசைஞானி இளையராஜா. அதாவது தனது அண்ணன் பாவலர் வரதராஜன் மூலம் தமிழ் இசை உலகில் தடம் பதித்தவர். இவர் கிராமிய இசை, கர்நாடகா இசை மேற்கிந்திய இசைகளை கற்றுத் தேர்ந்து தனது சிறந்த இசை அர்ப்பணிப்பால் உலக மக்கள் அனைவரையும் தன் வசியப்படுத்தியவர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, என பல்வேறு மொழிகளில் இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து பல்வேறு பாடல்களை பாடி அசத்தியுள்ளார். இசைஉலகில் தனக்கென்று தனி இடத்தைப் பிடித்து மேஸ்ட்ரோ இளையராஜா மக்கள் கொண்டாடும் உயரத்தைப் பிடித்தார்.

இந்த நிலையில், லண்டனில் உள்ள அப்போலோ அரங்கில் வேலியன்ட் என்ற தலைப்பில் உருவாக்கிய சிம்பொனியை இன்று அரங்கேற்றுகிறார் இசையமைப்பாளர் இளையராஜா. முன்னதாக இசைஞானி இளையராஜாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், த.மா.க. தலைவர் ஜி.கே.வாசன், வி.சி.க. தலைவர் திருமாவளவன், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், நடிகர் சிவகார்த்திகேயன் ஆகியோர் இளையராஜாவை நேரில் சந்தித்து தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்தனர். அதே சமயத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இன்று சிம்பொனியை அரங்கேற்ற உள்ள இளையராஜாவுக்கு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளார். இது குறித்த வாழ்த்து குறிப்பில்,

பண்ணைபுரத்தில் ஹார்மோனியம் வாசித்த கைகள், இன்று லண்டனில் சிம்பொனி படைக்கிறது.
சாமி, உங்களால் இந்தியாவிற்கே பெருமை! பாராட்டுகள் என பதிவிட்டுள்ளார்.
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}