சென்னை: நடிகர் விஜய் எனக்கு போட்டி என நினைத்தால் அது எனக்கு மரியாதை இல்லை. நானும் விஜய்க்கு போட்டி என நினைத்தால் அவருக்கும் மரியாதை இல்லை என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். ரஜினி மற்றும் விஜய் ரசிகர்கள் பல நாட்களாக குழப்பி வந்த காக்கா, கழுகு கதைக்கு முற்றுபுள்ளி வைத்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.
ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா இயக்கியுள்ள படம் லால் சலாம். இந்த படத்தில் ரஜினிகாந்த் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். கிரிக்கெட்டை மையப்படுத்தி இந்த படம் தயாராகியுள்ளது. சிறப்பு தோற்றத்தில் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் நடித்துள்ளார்.இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. இந்த விழாவில் ரஜினி பேசியது தான் தற்போது சோஷியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
விழாவில் ரஜினி பேசுகையில், நடிகர் விஜய் எனக்கு முன்னால் வளர்ந்த பையன். நடிகர் விஜயை சின்ன வயதிலிருந்தே பார்த்து வருகிறேன். தர்மத்தின் தலைவன் படப்பிடிப்பின் போது விஜயின் தந்தை என்னிடம் வந்து, என்னுடைய பையன் படித்து வருகிறான். அவனுக்கு நடிப்பின் மீது ஆர்வம் அதிகமாக உள்ளது. நீங்கள் கூறுங்கள் அவன் படித்துவிட்டு வந்தவுடன் நடிக்க வேண்டுமென தெரிவித்தார். அதன் பிறகு விஜய் நடிப்பிற்கு வந்து உழைப்பால் உயர்ந்து உள்ளார்.
தற்போது நன்றாக நடித்து வருகிறார். தற்போது அரசியலுக்கு வரும் முயற்சியில் உள்ளார். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள், தற்போது விஜய்க்கும் எனக்கும் போட்டி என கூறுவது மிகவும் கவலை அளிக்கிறது. அவரும் மேடையில் எனக்கு போட்டி நான் தான் என கூறியுள்ளார். நடிகர் விஜய் எனக்கு போட்டியாக நினைத்தால் அது எனக்கு மரியாதை இல்லை. நானும் விஜய்க்கு போட்டியாக நினைத்தால் அவருக்கும் மரியாதை இல்லை. தயவுசெய்து என்னுடைய மற்றும் அவருடைய ரசிகர்கள் காக்கா கழுகு கதையை ரசிகர்கள் இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும் என பேசினார்.
முதல்வரின் கோரிக்கை மனு... தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியிடம் வழங்கப் போவது யார் தெரியுமா?
தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டம்!
நான் வெற்றி பெற்றவன்.. இமயம் தொட்டு விட்டவன்.. பகையை முட்டி விட்டவன்.. கமலுக்கு வைரமுத்து வாழ்த்து!
திமுக ஆட்சியின் போலீசுக்கே பாதுகாப்பு இல்லை... சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது: எடப்பாடி பழனிச்சாமி
கோவை, நீலகிரிக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வைகோவால் மனஉளைச்சல்.. ஆகஸ்ட் 2ம் தேதி உண்ணாவிரதம்.. அறிவித்தார் மல்லை சத்யா
கார்கில் வெற்றி தினம்.. தியாகிகளின் நினைவிடத்தில் குடும்பத்தினர், பொதுமக்கள் வீர அஞ்சலி
தாய்லாந்து-கம்போடியா எல்லை மோதல்.. கவனமாக இருக்குமாறு இந்தியர்களுக்கு அறிவுரை
நடிப்பு சலித்துவிட்டால்.... பார்ஸிலோனாவில் ஊபர் டிரைவராகிவிடுவேன்: மனம் திறந்த நடிகர் பகத் பாசில்
{{comments.comment}}