சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள வேட்டையன் படம் வரும் அக்டோபர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் 20 ஆம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ரஜினிகாந்த் ரசிகர்கள் குஷி அடைந்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் திரைப்படங்கள் என்றாலே மிகப்பெரிய மவுசு உண்டு. அதிலும் ரஜினியின் நடிப்பு, தோற்றம், ஸ்டைல், என அன்று முதல் இன்று வரை ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்துள்ளார். அதனால்தான் சூப்பர் ஸ்டாரின் படங்களுக்கு எப்போதுமே ஆதரவு அதிகம் இருக்கும். அந்த வரிசையில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் வேட்டையின் படம் குறித்த அப்டேட்டுக்கு ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து வருகின்றனர்.

இப்படத்தை த.செ ஞானவேல் இயக்கி உள்ளார். இதில் அமிதாப்பச்சன், பகத் பாசில், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, ரித்திகா சிங், அபிராமி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் அல்லிராஜா இப்படத்தை தயாரித்துள்ளார்.
இதற்கிடையே ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் நோக்கில் படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்டுகளை பட குழுவினர் வெளியிட்டு வருகின்றனர். அதன்படி சமீபத்தில் படத்தின் தலைப்பு மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. இதனைத் தொடர்ந்து இப்படம் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இதன் பின்னர் வேட்டையன் படத்தில் இசை வெளியீட்டு விழா எப்போது.. என ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்து வந்தனர்.
ஒரு படத்திற்கு இசை என்பது மிகவும் முக்கியமான ஒன்று. அதிலும் படத்தின் பாடல்களே அப்படத்தின் வெற்றிக்கு காரணமாகவும் இருந்து வருகிறது. குறிப்பாக தற்போது உள்ள காலகட்டத்தில் அனிருத் இசையமைப்பு என்றாலே ரசிகர்கள் துள்ளிக் துள்ளிக் குதிக்கும் வகையில் படத்தின் பாடல்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து வருகிறது. அந்த வரிசையில் அனிருத் இசையில் உருவாகியுள்ள வேட்டையன் படத்தின் இசையமைப்பிற்கும் ரசிகர்களிடையே மிகுந்த ஆர்வம் இருந்து வருகிறது.
இந்த நிலையில் வேட்டையின் படத்தின் இசை விழா வரும் செப்டம்பர் 20ஆம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடத்த மிக பிரம்மாண்ட ஏற்பாடு செய்து வருகின்றனராம் படக் குழுவினர். படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்து வெளியீட்டுக்கு தயாராக உள்ள நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது அடுத்த படமான கூலி படத்தில் கமிட்டாகி தற்போது நடித்து வருகிறார் ரஜினிகாந்த்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
International Yoga Day: செய்யும் வழி யோக வழி! உய்யும் உன் தேக வலி!
சர்வதேச யோகா தினம்: அமைதியே ஆன்மா.. மூச்சுப் பயிற்சியே மூலதனம்!
Happy Father's day: தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை
Father's Day: தந்தை எனும் கோயில்!- கலைவாணி ராமு
திமுக - இந்திய யூனியன் முஸ்லீம் லீக்.. 60 ஆண்டு கால கூட்டணி முறிந்தது!
ஜூலை 1 முதல்.. புத்தெழுச்சி பெறப்போகும்.. 125 நாள் ஊரக வேலைவாய்ப்பு திட்டம்
வகுப்பறையில் ரீல்ஸ் பண்ணாதீங்கப்பா.. தவெகவினருக்கு அண்ணாமலை அட்வைஸ்!
சென்னை மாநகராட்சிப் பள்ளியில் .. சர்வதேச யோகா தினம்.. மாணவர்கள் அசத்தல்
மிஸ்.. நாடகம்.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்!
{{comments.comment}}