பன் பட்டர் ஜாம் படம் மூலம்.. ஹீரோவாக அவதாரம் எடுத்தார்.. பிக் பாஸ் புகழ் ராஜு!

Jul 02, 2024,12:20 PM IST

சென்னை:   விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவில் கலந்துகொண்டு புகழ்பெற்ற ராஜு பன் பட்டர் ஜாம் மூலம் தற்போது ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ளார்.


பிக் பாஸ் புகழ் ராஜு விஜய் டிவியில் கனா காணும் காலங்கள், ஆண்டாள் அழகர், சரவணன் மீனாட்சி, உள்ளிட்ட பல்வேறு சீரியல்களில் நடித்து பிரபலமானார். இதன் பின்னர் நட்புனா என்னானு தெரியுமா, முருங்கைக்காய் சிப்ஸ், உள்ளிட்ட படங்களில் குணசேத்திர வேடங்களிலும் நடித்து வந்தார். ‌இதனை தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு பிக் பாஸ் சீசன் 5 ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டு வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார் ராஜூ. இதன் மூலம் பலதரப்பு ரசிகர்களையும் கவர்ந்து பிரபலமாக அறியப்பட்டார்.




இப்படியாக தனது கேரியரில் படிப்படியாக முன்னேறி வெற்றி முகத்தை கண்ட ராஜு ஒரு கட்டத்தில் விஜய் ஸ்டார்ஸ் தொலைக்காட்சியில் முக்கிய தொகுப்பாளராகவும் விளங்கினார். சின்னத்திரையில் சிறு சிறு கதாபாத்திரங்கள் நடித்து அவ்வப்போது வெள்ளித்திரைகளிலும் சிறு சிறு ரோல்களிலும் நடித்து, பின்னர் பிக் பாஸ் ரியாலிட்டி ஷோ மூலம் புகழின் உச்சிக்கே சென்ற ராஜு தற்போது ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ளார்.


இவர் ஹூரோவாக அறிமுகமாகும் படத்திற்கு பன் பட்டர் ஜாம் என பெயரிடப்பட்டுள்ளது. ரெயின் ஆப் ஆரோஸ் என்டர்டைன்மென்ட் சார்பில்  சுரேஷ் சுப்ரமணியன் தயாரிப்பில் பன் பட்டர் ஜாம் படத்தை ராகவ் மிர்தாத் இயக்குகிறார். இவர் ஏற்கனவே ஜீரோ படத்திற்கு வசனம் எழுதியவர். அதேபோல் பாரம் படத்திற்கு சிறந்த திரைக்கதை மற்றும் வசனம் எழுதியதற்கு தேசிய விருதும் பெற்றவர். காலங்களில் அவள் வசந்தம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுக இயக்குனராக தோன்றியவர். தற்போது ராஜு நடிக்கும் பன் பட்டர் ஜாம் படத்தையும் இயக்குகிறார்.இது இவருக்கு இரண்டாவது படம்.




இதில் ஆதித்யா, பிரசாத், பவ்யா தாரிக்கா, சார்லி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, மைக்கேல் தங்கதுரை, விஜே பப்பு, உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். தற்போது உள்ள காலகட்டத்தை புன்னகையோடு எதிர்கொள்ள கற்றுக் கொடுக்கும் இன்றைய இளைஞர்களை பற்றிய கதையாகும். ஒருவனை சுற்றி எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் அந்தக் கணத்தை சந்தோஷமாக வாழ பழகினால் வாழ்க்கையில் கொண்டாட்டங்களுக்கு குறைவில்லை என்கிற பாசிட்டிவான கருத்தை முழுக்க முழுக்க நகைச்சுவை ததும்ப ததும்ப உருவாக்கப்பட்டுள்ளதாம்.


இந்த நிலையில் இப்படத்தில் இறுதி கட்ட படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .மேலும் வரும் ஜூலை எட்டாம் தேதி இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக இருக்கிறது.

சமீபத்திய செய்திகள்

news

போளி விற்கும் 80 வயசு தாத்தா.. ரூ. 1 லட்சம் பணத்துடன் உதவக் காத்திருக்கும் ராகவா லாரன்ஸ்

news

செயல் தலைவர் பதவி அடுத்து யாருக்கு.. டாக்டர் ராமதாஸின் சாய்ஸ் இவரா?.. பரபரக்கும் பாமக!

news

பாமக வின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து அன்புமணி நீக்கம் : டாக்டர் ராமதாஸ் அதிரடி

news

125 சீட்.. திமுக கூட்டணியில் குண்டைப் போட்ட காங்கிரஸ் தலைவர்.. திமுக.,விலும் ஆரம்பமானது கலகம்

news

சட்டசபைத் தேர்தல் வேலையில் மும்முரம் காட்டும் பிரதான கட்சிகள்.. குழப்பத்தில் கூட்டணி கட்சிகள்

news

இது வேட்டையாட வரும் சிங்கம் அல்ல.. வேடிக்கை காட்ட வரும் சிங்கம்: விஜய்யை விமர்சித்த சீமான்!

news

13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அலர்ட்!

news

ஆடு, மாடு மாநாட்டை தொடர்ந்து மலைகள், கடல்கள், ஆறுகளுக்கு அடுத்தடுத்து மாநாடு நடைபெறும் : சீமான்!

news

தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி மொழி ஏற்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்