சென்னை: நடிகர் சூர்யா ரூ. 120 கோடி மதிப்பில், சொந்தமாக தனி விமானம் வாங்கினதாக தகவல்கள் வெளியான நிலையில், இது சுத்தப் பொய்யான செய்தி. அவர் விமானம் வாங்கவில்லை என்று சூர்யா தரப்பில் திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவருடைய அசாத்தியமான நடிப்பால் தமிழ் சினிமாவில் ஏராளமான ரசிகர்களை தன் வசப்படுத்தியவர். இதனால் இவருக்கென்ற தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. நடிகர் சூர்யா கடைசியாக நடித்த படம் எதற்கும் துணிந்தவன். இப்படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.

இதனை தொடர்ந்து தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். தற்போது இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. மேலும் இப்படம் வரும் அக்டோபர் 10ஆம் தேதி தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட 10 மொழிகளில் வெளியாக தயாராக உள்ளது. 3d தொழில்நுட்பம் மற்றும் தேவி ஸ்ரீ பிரசாந்த் இசையில் வெளியாக உள்ள இப்படத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா தனது அடுத்த படமான 44வது படத்தில் கமிட்டாகியுள்ளார். ஷூட்டிங்கும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே நடிகர் சூர்யா தனி ஜெட் விமானம் ஒன்றை வாங்கி இருப்பதாக ஒரு தகவல் வெளியானது. மேலும் இதன் விலை 120 கோடி எனவும், தமிழ் சினிமாவிலேயே சூர்யா தான் விலை உயர்ந்த தனி விமானத்தை வைத்திருப்பதாகவும் வதந்திகள் காட்டுத் தீயாய் பரவி வந்தன.
இந்த நிலையில் இந்தத் தகவலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நிலையில் சொந்தமாக தனி விமானம் வாங்கியுள்ளார் என்பதற்கு அவரது தரப்பு திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளது. அந்த தகவலில் துளி கூட உண்மை தன்மை இல்லை என நடிகர் சூர்யாவுக்கு நெருக்கமானவர்கள் மறுத்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அலர்ட்!
பசி,பட்டினியை போக்கவில்லை... தீபம் ஏற்ற வேண்டும் என கூறுகிறார்கள்: சீமான் ஆவேசம்!
வானுயர் ஜிஎஸ்டிபி வளர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது:முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
மெஸ்ஸியை பார்க்க முடியாமல் ரசிகர்கள் ஆவேசம்... ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மம்தா பானர்ஜி!
திமுக அரசின் துரோகத்திற்கு எதிராக தெருவுக்கு வந்த போராடும் அரசுஊழியர்கள்: அன்புமணி ராமதாஸ் வேதனை!
ஜிடிபி வளர்ச்சியில் தமிழ்நாடு புதிய சாதனை.. பெரிய மாநிலங்களில் நம்பர் 1 நாமதான்!
Flashback 2025.. தென்னிந்தியத் திரையுலகுக்கு பெரும் சோகம் தந்து விடைபெறும் 2025!
சினிமாத் துறையினரை தொடர்ந்து பாதிக்கும் மன அழுத்தம்.. உரிய கவுன்சிலிங் அவசியம்!
Amma's Pride ஆஸ்கர் விருதுக்குப் போட்டியிடும் சென்னையில் உருவான குறும்படம்!
{{comments.comment}}