சென்னை: அண்ணாமலை பாஜக தலைவராக இருக்கும் வரை இங்கு பூஜ்ஜியம்தான் கிடைக்கும் என்று நடிகர் எஸ்.வி.சேகர் கூறியுள்ளார்.
நடிகரும், தீவிர பாஜக ஆதரவாளருமான எஸ்.வி.சேகர் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவரிடம் அதிமுக - பாஜக கூட்டணி முறிவு குறித்து கேட்கப்பட்டது. அதற்கு எஸ்.வி.சேகர் பதிலளிக்கையில்,
பாஜக கூட்டணியிலிருந்து தமிழ்நாட்டில் உள்ள அதிமுக வெளியேறி இருக்கிறது. இதில் மத்தியில் உள்ள நரேந்திர மோடி அவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. நாடாளுமன்ற தேர்தலில் மோடி ஏற்கனவே இரண்டு முறை வெற்றி பெற்றுள்ளார். ஹாட்ரிக் முறையில் மூன்றாவது முறையாக பிரதமராக வெற்றி பெறுவது உறுதி.
இந்த கூட்டணி இருந்தாலும் இல்லாவிட்டாலும் தமிழ்நாடு என்பது பாஜகவுக்கு மிகப்பெரிய அளவில் உதவுவது கிடையாது. அண்ணாமலை அதிமுக கூட்டணி தலைவர்களை தவறுதலாக பேசியுள்ளார். அண்ணாமலைக்கு அரசியல் அனுபவம் என்பதே கிடையாது. அப்படிப்பட்ட ஒருவரை தமிழ்நாட்டில் பாஜக தலைவராக நியமித்தது தவறு. அண்ணாமலையால் தான் இந்த கூட்டணி முறிந்தது.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விரைவில் மாற்றப்படுவார். இவர் ஐபிஎஸ் படிக்காமல் இருந்திருக்கலாம். இந்த வாய்ப்பு திறமை வாய்ந்த வேறு யாருக்காவது உதவி இருக்கும். அண்ணாமலை தலைவராக இருக்கும் வரை தமிழ்நாட்டில் பாஜக பூஜ்ஜியம் தான்.
தேர்தல் என்பது எண்ணிக்கையை அடிப்படையாக கொண்ட ஒரு கூட்டணி. எண்ணிக்கை மட்டுமே போதும். ஆளுங்கட்சி மாநிலத்தில் செய்யக்கூடிய நன்மையே ஓட்டு வங்கியாக மாறும். இதனைத் தாண்டி நன்மை செய்து மக்களிடம் கொண்டு போக வேண்டும். எனவே வரும் சட்டமன்றத் தேர்தலில் நரேந்திர மோடி தான் பிரதமராக வருவார் என கூறியுள்ளார்.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}